‘கோமா நோயாளிக்கு படுக்கையில் நடந்த பயங்கரம்..’ மருத்துவமனை ஊழியர்களின் பதிலால் அதிர்ந்துபோன தந்தை..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியப்பிரதேசத்தில் கோமாவில் உள்ள நோயாளி ஒருவரை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் ரட்லாம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சூரஜ் பாட்டி என்பவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமா நிலையில் இருக்கும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சூரஜுடைய படுக்கையில் ரத்தக்கரை இருந்துள்ளது. மேலும் அவருடைய வலது காலிலிருந்தும் ரத்தம் வடிந்துள்ளது. 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை உடனடியாக வார்டு பாய் மற்றும் செவிலியர்களிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள், “மருத்துவமனையில் உள்ள எலிகள்தான் உங்கள் மகனைக் கடித்திருக்கும். அந்த எலிகளை விரட்ட எவ்வளவு முயற்சித்தாலும் மீண்டும் வந்துவிடுகின்றன. ஆனால் அவை நோயாளிகளைத் தாக்கும் என நாங்கள் நினைக்கவில்லை” என அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்களின் பதிலைக் கேட்டு அதிர்ந்துபோன சூரஜின் தந்தை இதுகுறித்து மருத்துவரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர் அவரிடம்  உறுதியளித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கோமாவில் உள்ள நோயாளி ஒருவரை எலி கடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MADHYA PRADESH, GOVERNMENT, HOSPITAL, COMA, PATIENT, RAT, SHOCKING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்