ரத்தன் டாடாவுடன் ஆபீஸ் மீட்டிங் போகும் தெருநாய்.. அவரு சொன்ன வார்த்தைய கேட்டு 40 நிமிஷம் அப்படியே இருந்துச்சு.. வெளிவந்துள்ள சுவாரஸ்ய தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரத்தன் டாடா தன்னுடன் எப்போதும் ஒரு தெரு நாயை அழைத்து வருவது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று பத்திரிக்கையாளர் மூலம் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தினமும் அலுவலகக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறது.

Advertising
>
Advertising

நீ என் பொண்ணு இல்லம்மா.. எனக்கே இப்போ தான் தெரியுது.. 30 வருஷம் முன்னாடி மருத்துவமனையில் நடந்தது என்ன? தெரிய வந்த உண்மை

தெருநாய்களுக்கு தனி இடம்:

இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலாதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவிற்கு நாய்கள் என்றாலே அலாதி பிரியம். அதோடு அவர் மும்பையில் இருக்கும் டாடா தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸில் தெருநாய்களுக்கென்று தனி இடமே வைத்துள்ளார்.

மிகவும் பிடித்த நாய்:

தினமும் அங்கு வரும் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுத்து வந்த நிலையில் அந்த கும்பலில் இருந்த ஒரு நாய் மட்டும் அவருக்கு மிகவும் பிடித்தமான நாய்களில் ஒன்றாக மாறியது. அதற்கு கோவா எனவும் பெயரிட்டுள்ளார் ரத்தன் டாடா. ரத்தன் டாடா வந்துவிட்டால் கோவா எப்போதும் அவருடன் அலுவலகத்திற்குள் சென்று விடும். அதோடு டாடா பங்கேற்க்கும் அலுவலக மீட்டிங்களில் கூட அவருடன் கலந்து கொள்ளும்.

டாடாவின் அருகில் அமரும் கோவா:

இந்நிலையில், கரிஷ்மா மேத்தா என்ற பெண் 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற அமைப்பிற்காக ரத்தன் டாடாவை நேர்காணல் செய்ய சென்றுள்ளார். கரிஷ்மாவிற்கு நாய்கள் என்றால் சிறிது பயம். ரத்தன் டாடாவைச் சந்திக்க கரிஷ்மா டாடாவின் இருக்கைக்கு அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் கோவா சர்வ சாதாரணமாக அமர்ந்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார்.

நாய்களை கண்டால் பயமாக இருக்கிறது:

இது குறித்து பேசிய கரிஷ்மா , 'நான் ரத்தன் டாடாவை பார்ப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு வெளியில் காத்திருந்த போது அவரது இருக்கைக்கு அருகில் நாய் ஒன்று அமர்ந்திருந்து. இது எனக்கு ஒரு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உடனே அங்கு வந்த ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிடம் நாய்களை கண்டால் பயமாக இருக்கிறது என சொன்னேன். நான் சொன்னதை ரத்தன் டாடா கேட்டுள்ளார்.

நல்ல பிள்ளையாக அமர்ந்திருக்க வேண்டும்:

ரத்தன் டாடா மனிதர்களிடம் பேசுவது போன்று தனது இருக்கைக்கு அருகில் இருந்த நாயிடமும், 'கோவா, அவர் உன்னை கண்டு பயப்படுகிறார். அதனால் நல்ல பிள்ளையாக அமர்ந்திருக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார். அந்த நாயும் டாடாவின் பேச்சைக்கேட்டு சுமார் 40 நிமிடம் அமைதியாக இருந்தது. நான் அங்கிருக்கும் வரை அந்த நாய் என்னிடம் வரவேயில்லை.

கோவா குறித்து ரத்தன் டாடா என்னிடம் பேசினார். கோவா ஒரு தெரு நாய் எனவும் அதனை அவர் தத்து எடுத்துக்கொண்டதாகவும் என்னிடம் கூறினார்' என தெரிவித்துள்ளார்.

என் மனைவி கள்ளக்காதலனோடு.. பேசிகிட்டு இருக்குறதா தகவல் வந்துச்சு.. ஸ்பாட்டுக்கு போய் கணவன் நடத்திய அதிரடி ஆக்ஷன்

RATAN TATA, STREET DOG, OFFICE, ரத்தன் டாடா, ஆபீஸ் மீட்டிங், தெருநாய்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்