‘புற்றுநோய்’ பாதித்த பெண்ணின் கால் விரலை ‘ரத்தம்’ வர கடித்த எலி.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணின் காலில் எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 40 வயதான சாக்சி கண்டேல்வால் என்பவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால், சாக்சிக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தரையில் ஒரு போர்வை கொண்டு படுக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாக்சியின் காலில் எலி கடித்து ரத்தம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டைம் ஆப் இந்தியா பத்திரிகைக்கு சாக்சியின் கணவர் தெரிவித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி போர்த்தியிருந்த போர்வையை விலக்கி பார்த்தபோது அவரது காலில் எலி ஒன்று கடித்து ரத்தம் வெளியே வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால் அப்போது மருத்துவமனை ஊழியர்கள் யாரும் இல்லாததால், தானே மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று மருந்தும், பேண்டேஜூம் வாங்கி வந்து மனைவியின் காயத்துக்கு மருந்துபோட்டுள்ளார். அப்போது தனது மனைவி வலியால் துடித்ததாக சாக்சியின் கணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்டுக்கு' அனுப்பப்படும் 'கொரோனா நோயாளிகள்...!' ' தமிழக அரசு நடவடிக்கை...' ''காரணம் என்ன தெரியுமா?...''
- 'வெண்டிலேட்டர்' மூலம் 'சிகிச்சை'!.. 'நோகாமல்' கைரேகையை 'களவாடிய' பெண்மணி.. மருத்துவமனையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'எங்களுக்கு பாதுகாப்பு இல்ல!'.. மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்த டாக்டர்கள்... மர்மம் காக்கும் நாடு!.. பதறவைக்கும் பின்னணி!
- பேங்கில் ரூ.500 எடுக்க 30 கிமீ நடந்தே சென்ற பெண்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.. வெறுங்கையுடன் வீடு திரும்பிய சோகம்..!
- கம்பம் அரசு மருத்துவமனையில் ‘4 நாளில் 40 பிரசவங்கள்’ பார்க்கப்பட்டது.. மருத்துவ அலுவலர் தகவல்..!
- 'பிணவறையில் அழுகிய உடல்'... 'சுவிட்ச்சை ஆன் செய்ய மறந்த ஊழியர்'... காத்திருந்த அதிர்ச்சி!
- ‘மனைவி சொன்ன ஒரு வார்த்தை’.. ஆத்திரத்தில் ‘மூக்கை’ கடித்து துப்பிய கணவன்.. மிரள வைத்த கொடூரம்..!
- Video: 'பட்டப்பகலில்' பொதுமக்களை விரட்டி... சராமரியாகத் 'தாக்கிய' புலி... வைரலாகும் வீடியோ!
- "உடம்பு சரியில்லாத குட்டியை .. கவ்விக்கிட்டு எமர்ஜன்ஸி வார்டுக்கே வந்துடுச்சு!".. 'தாய்ப்பூனையின்' கலங்கவைத்த 'பாசப் போராட்டம்'!
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு நேர்ந்த சோகம்.. ‘ஒருவர் பலி’.. இரவு சாப்பிட்ட உணவு காரணமா?.. அதிர்ச்சி சம்பவம்..!