'மாட்டு சாணத்தில் உருவாக்கப்பட்ட சிப்...' இது யூஸ் பண்ணினா கண்டிப்பா 'அந்த' பாதிப்பை தடுக்கலாம்...! - ராஷ்டிரிய காமதேனு ஆயோக் தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாடுகளில் இருந்து கிடைக்கபெறும் பால் பொருட்களை தவிர்த்து பசு மாட்டுச் சாணம் மற்றும் பசு மாட்டு சிறுநீர் ஆகியவற்றை விற்க ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற புது பிரிவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு வேளாண் துறையின் கீழ் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற பிரிவை உருவாக்கி அதன் மூலம் பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் பொருட்களை தவிர பசு மாட்டுச் சாணம் மற்றும் பசு மாட்டு சிறுநீர் ஆகியவற்றை விற்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இப்பிரிவின் தலைவராக வல்லாப் கத்திரியா என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கின் தலைவர் வல்லபாய் மாட்டு சாணத்தால் செய்யப்பட்டுள்ள சிப் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சிப்பை குஜராத்தில் இருக்கும் ஒரு பசு மாட்டுப் பண்ணை உருவாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாட்டு சாணத்தால் உருவாக்கப்பட்ட இந்த சிப்பானது செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை குறைக்கும் எனவும் நோய்களை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது எனவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கத்திரியா, 'மாடுகளின் சாணமானது நாம் ஒவ்வொருவரையும் காப்பாற்றும். மேலும் செல்போன்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில் இருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். மாட்டுச் சாணத்தால் ஆன இந்த சிப்புக்கு 'கவ்சத்வ கவாச்' என்று பெயரிடப்பட்டுள்ளது' என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்தில் இருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த சிப்பை பயன்படுத்துங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரிட்ஜ்ல 3 பீசா துண்டுகள் இருக்கு'.. நீங்க என் அம்மாவாக இருந்தால், உண்மையிலே என் மேல பாசம் இருந்தா'.. அதிகாலை 4 மணிக்கு மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்!.. 'தலைசுத்தி' நின்ற தாய்!
- 'பார்சலை கொடுத்துவிட்டு நைசா நழுவ பார்த்த டெலிவரி பாய்'... 'போன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த ஷாக்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- ஆஃபர் போடலாம், அதுக்காக இவ்ளோ ரேட் கம்மியாவா...! போறதுக்குள்ள காலி ஆயிடுமோ...? - அடிச்சு புடிச்சு மொபைல் கடைக்கு ஓடியவர்களுக்கு கிடைத்த ஷாக்...!
- 'ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ளான்கள்!'.. அதிலும் IPL, டிஸ்னி+ஹாட்ஸ்டார் விரும்பிகளுக்கு , இந்த சீசன் முழுவதும் அடித்த யோகம்! முழு விபரம்!
- 'அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்'... 'இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்'... அசத்திய ஹெட் மாஸ்டர்!
- எப்போதும் ‘போனில்' பேசிக்கொண்டே இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ‘கொடூரம்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
- டாய்லெட்டில் உட்கார்ந்து அதிக நேரம் ‘செல்போன்’ யூஸ் பண்றீங்களா?.. அப்போ இந்த ‘நியூஸ்’ உங்களுக்குதான்.. ஆய்வில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்..!
- 'கணவன் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்காததால், தன் உடலில்...' புள்ளைங்க படிப்புக்கு கூட உதவ மாட்டீங்கல...! மனைவி செய்த அதிர்ச்சி காரியம்...!
- 'கொரோனாவைக் கட்டுப்படுத்த...' 'இஸ்ரேல் கண்டுபிடித்த வேற லெவல் திட்டம்...' 'கடும்' எதிர்ப்புக்கிடையே தொடரும் 'சோதனைகள்...'
- இந்தியாவை அதிரவைத்த பயங்கரம்!... பள்ளி மாணவர்களின் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' ஆபாச உரையாடல்!.. காவல்துறையினர் அதிரடி!.. நடந்தது என்ன?