சூரியனை சுத்தி தோன்றிய வானவில் வட்டம்.. அதுவும் 22 டிகிரிக்கு.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய சுவாரஸ்ய தகவல்..வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரகாண்ட் மாநிலம், டேராடூனில் சூரியனை சுற்றி மிகவும் அரிதான வானவில் வட்டம் தோன்றியிருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | "ரூ.33 லட்சம் சம்பளம்".. Coding போட்டியில வென்ற இந்தியர்.. வயச கேட்டு ஆடிப் போன அமெரிக்க நிறுவனம்.. இப்பவே இப்படியா..?

வானவில் வட்டம்

வானம் எப்போதுமே பல சுவாரஸ்யங்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களை மனிதர்களுக்கு அளித்துக்கொண்டே இருக்கிறது. இன்று நேற்றல்ல ஆதிவாசியாக இருந்த காலத்தில் இருந்தே வானத்தை பல்வேறு ஆச்சரியங்கள் நிரம்பியதாகவே மனிதர்கள் கருதி வந்திருக்கின்றனர். ஆனால், விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் மைல்கல் சாதனைகளை மனிதகுலம் நிகழ்த்திவிட்ட இந்த காலத்திலும் வானம் தனது ஆச்சர்ய பரிசுகளை மனிதர்களுக்கு அளிக்க தவறுவதில்லை.

அந்த வகையில் நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் வானத்தில் வித்தியாசமான அதே நேரத்தில் மிகவும் அரிதான வானவில் வட்டம் தோன்றியிருக்கிறது. சூரியனை சுற்றி சுமார் 22 டிகிரி கோணத்தில் தோன்றிய இந்த வானவில் வட்டத்தை பொதுமக்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கின்றனர். மேலும், சிலர் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட கொஞ்ச நேரத்தில் இவை வைரலாகிவிட்டன.

என்ன காரணம்?

இது சூரியன் அல்லது நிலவை சுற்றி வழக்கமாக நடக்கக்கூடியது தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சூரியன் அல்லது நிலவினை சுற்றியுள்ள மில்லியன் கணக்கான அறுகோண பனித் துகள்களில் மீது ஒளிக் கதிர்கள் பட்டு ஒரே நேரத்தில் எதிரொளிக்கும் போது இந்த வட்டங்கள் தோன்றுகின்றன. இந்த வட்டம் பூமியில் இருந்து 20,000 அடி உயரத்தில் தோன்றும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த நிகழ்வை 22 degree halo என்றும் நிபுணர்கள் அழைக்கின்றனர். இதுபற்றி வானியல் ஆராய்ச்சியாளர்கள் பேசுகையில், ஒளியானது பனிக்கட்டி படிகங்களால் பிரதிபலிக்கப்பட்டு, ஒளிவிலகல் ஏற்பட்டு, பின்னர் நிறங்களாகப் பிரிக்கப்படும் போது, ஒரு ஒளிவட்டம் உருவாகிறது" என்கின்றனர்.  இதனிடையே இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

 

Also Read | நடு பாலைவனத்துல சவூதி அரேபியா செய்ய இருக்கும் அற்புதம்.. 75 மைல் நீளமாம்.. செலவை கேட்டாலே தலை சுத்திடும்போலயே..!

UTTARAKHAND, உத்தராகண்ட், SUN HALO, DEHRADUN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்