'கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள'... 'புதிய வகை நோய் பாதிப்பு?!!'... 'உறுதி செய்து சுகாதார அமைச்சர் ஷைலஜா விளக்கம்!!!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில்  ஒருவருக்கு ப்ளாஸ்மோடியம் ஒவேல் (Plasmodium Ovale) என்னும் மலேரியாவின் புதிய அரிய  ஜீனஸ் வகை பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சரான ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கன்னூர் மாவட்ட மருத்துவமனையில் ராணுவ வீரர் ஒருவருக்கு சிகிச்சையளிக்கும்போது, அவருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகவும், அவர் சூடானில் இருந்து வந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சரான ஷைலஜா கூறியுள்ளார். மேலும்  தடுப்பு முறையின் மூலமாகவும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலமும் இந்த நோய் பரவல் தடுக்கக்கூடியதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ப்ளாஸ்மோடியம் ஒவேல் என்னும் இந்த இன வகை ப்ரோடோஜோவா மலேரியா நோய் தாக்கத்துக்கு காரணமான ஒன்று. ப்ளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் மற்றும் ப்ளாஸ்மோடியம் விவாக்ஸ் ப்ரோட்டோஜோவாக்கள் பொதுவாக இந்தியாவில் கணடறியப்படும் வகைகளாகும். தற்போது கண்டறியப்பட்டுள்ள ப்ளாஸ்மோடியம் ஒவேல் இங்கு கண்டறியப்படும் அரிய வகையாகும். இது ஆப்பிரிக்காவிலேயே முன்னதாக கண்டறியப்பட்டுள்ள வகை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 59, 517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,533 பேர் உயிரிழந்துள்ளனர். 5,91,845 பேர் குணமடைந்துள்ளனர்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்