10 வருஷமா இந்த பக்கமே வராத ‘அரிய’ உயிரினம்.. ‘லாக்டவுனால்’ நடந்த நல்ல விஷயம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபத்து வருடம் கழித்து யமுனை நதிக்கு வந்த அரியவகை உயிரினம் வந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் உலகளவில் சுற்றுச்சூழலில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலைகள் இயக்கம், வாகன ஓட்டம் முற்றிலும் குறைந்ததால் காற்றுமாசு வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல் நதிகளில் நீரும் சுத்தமாகியுள்ளது. இந்தியாவின் மிக பெரிய நீர் வழிப்பாதையாக கருதப்படும் யமுனை நதி, அதிகளவில் மாசடைந்து காணப்பட்டது.
இந்த நதியில் டால்பின்கள் மற்றும் மீன்களை மட்டுமே உண்டு வாழும் கரியல் (Gharial) என்ற அரியவகை முதலைகள் வசித்து வந்தன. அதிகமான நீர் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல இறந்து போயின. இதனால் கரியல் வகை முதலைகள் கடந்த 10 ஆண்டுகளாக யமுனை நதியில் தென்படவே இல்லை.
இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், யமுனை நதி சுத்தமடைந்துள்ளது. தண்ணீரும் பளிங்கு போல ஓடத் தொடங்கியுள்ளது. இதனால் கரியல் வகை முதலைகள் மீண்டும் யமுனை நதியில் தென்படத் தொடங்கியுள்ளன. நான்கு, ஐந்து முதலைக்குட்டிகள் தண்ணீரின் மேற்பரப்பில் சுற்றித்திரிந்ததை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.
யமுனை நதியின் துணை நதியான சம்பல் நதியில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. இதுகுறித்து தெரிவித்த சம்பல் வனச்சரக அதிகாரிகள், ‘யமுனை நதியுடன் சம்பல் நதி கலக்குமிடத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. தற்போது இவை நல்ல வளர்ச்சி அடைந்து நீரில் விளையாடுகின்றன. இது ஒரு திருப்தி தரும் மாற்றம்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் 2 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு எண்ணிக்கை!.. ராமநாதபுரத்தில் இன்று 83 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- ஒன்றரை வயது குழந்தை உட்பட 54 உயிர்களை ஒரே நாளில் கொலையுண்ட கொரோனா!.. தமிழகத்தில் 80 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- தனியார் பள்ளி 'கல்விக்கட்டணம்' குறைக்கப்படுமா?... நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'முக்கிய' முடிவு!
- ‘தடபுடலா நடந்த கல்யாணம்’.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி.. அதிரடி ‘ஆக்ஷனில்’ இறங்கிய அதிகாரிகள்..!
- VIDEO: ‘இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது’.. கொதித்த ‘ஜெகன்மோகன்’.. ஆந்திராவை அதிரவைத்த வீடியோ..!
- "இங்கயும் கொரோனா வந்துடுச்சு... 2 நாளைக்கு முதல்வர் ஆபீஸ் க்ளோஸ்.. யாரும் வராதீங்க!".. அதிரடியாக அறிவித்த முதல்வர்!
- “எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே!”.. மதுரை டூ சிவகங்கை.. சிவகங்கை டூ சோழவந்தான்.. படையெடுக்கும் மதுபிரியர்கள்!
- 'கொரோனாவை' எதிர்க்க உதவும் 'டி-செல்கள்' சிகிச்சை... 'புதிய வழிமுறைகள்' குறித்த 'ஆராய்ச்சி' முடிவுகள் 'வெளியீடு...'
- 'இங்கிலாந்துக்கு' பரவிய '50%' கொரோனா 'தொற்றுக்கு...' 'இந்த நாடு தான் காரணம்...' 'தி மெயில் ஆன் லைன்' செய்தி நிறுவனம் 'குற்றச்சாட்டு...'
- "கொரோனாவுல நல்ல வேட்டை!"... 'டிப்டாப்' உடை.. கிராம மக்கள் 'டார்கெட்'.. ஒரே நாளில் சிக்கிய 22 போலி டாக்டர்கள்!