'பத்து நிமிசத்துல ரிசல்ட் வந்திடும்...' 'கொரோனாவை விரைவாக கண்டறிய ரேபிட் டெஸ்ட் டெக்னிக்...' கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று கண்டறிய ரேபிட் டெஸ்ட் டெக்னிக்கை பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே கே ஷைலஜா.

கொரோனா வைரஸ் பரவிவரும் தற்போதைய சூழலில் இந்தியாவில் பல மாநிலங்கள் தங்களின் திறமையால் புது புது உபகரணங்களை கண்டுபிடித்து வருகின்றனர்.    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவிய மாநிலங்களாக முதலில் மஹாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் கேரளாவும் உள்ளது. 

கேரளாவில் இதுவரை சுமார்  202 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 11 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் 181 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதித்த நபர்களுடன் தொடர்புடைய 1,41,211 பேர் அரசின் கண்காணிப்பு கீழ் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக ஒருவருக்கு கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய ஒருவரது ரத்தம், சளி மாதிரிகளை சோதனை நடத்தி ரிசல்ட் வெளியாக 24 மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரள முதல்வர் வழிகாட்டுதலின்படி விரைவாக  ரிசல்ட் வரும் வகையில் ரேபிட் டெஸ்ட் (rapid) நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற சோதனை நடத்தி 10 முதல் 30 நிமிடங்களில் ஆய்வு அறிக்கை தெரிந்துகொள்ளும் வகையில் ரேபிட் டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்து உடனடியாக ரிசல்ட் அறிந்துகொள்ள ரேபிட் டெஸ்ட் உதவியாக இருக்கும் எனவும், இதற்கு மிக குறைவான செலவே ஆகும் எனவும் தெரிவித்தார். மேலும் இதனால் கொரோனா வைரஸின் சமூகப் பரவல் குறையும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார் .

RAPIDTEST

மற்ற செய்திகள்