'பிரதமர் பங்கேற்ற அடிக்கல் நாட்டு விழா'... 'ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா'... மருத்துவமனையில் அனுமதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்டனர். ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் மந்திர் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையின் தலைவராக நித்ய கோபால் தாஸ் உள்ளார். இவரும் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டவர்.

இந்த சூழ்நிலையில் இந்த வாரம் அவருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, கொரோனா  பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே மதுரா மாவட்ட ஆட்சியரிடம் பேசிய யோகி ஆதித்யநாத், மெதந்தா மருத்துவமனை டாக்டரை தொடர்பு கொண்டு, நித்ய கோபால் தாஸ் மருத்துவச் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்