தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.க்கள்... மாநிலங்களவை துணைத்தலைவர் கொடுத்த 'டீ'-யை வாங்க மறுப்பு!.. அடுத்து நடந்த அதிரடி திருப்பம்!.. பிரதமர் மோடி 'பரபரப்பு' கருத்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அவையில் தனக்கு நேர்ந்த அவமதிப்புக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார்.

தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.க்கள்... மாநிலங்களவை துணைத்தலைவர் கொடுத்த 'டீ'-யை வாங்க மறுப்பு!.. அடுத்து நடந்த அதிரடி திருப்பம்!.. பிரதமர் மோடி 'பரபரப்பு' கருத்து!

தான் கொடுத்த டீயை தர்ணாவில் ஈடுபட்டுள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வாங்க மறுத்த நிலையில் ஹரிவன்ஷ் இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது எம்.பி.க்கள் தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக ஹரிவன்ஷ் கூறியுள்ளார்.

rajya sabha deputy chairman harivansh declares hunger strike

இதையடுத்து, ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு ஹரிவன்ஷ் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக இடைநீக்கத்தை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்.பி.க்கள் விடியவிடிய போராட்டம் நடத்தினர். மேலும், இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.



இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களை சந்தித்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பிளாஸ்கில் தேனீரும், கோப்பைகளையும் கொண்டு வந்து, அவர்கள் அருகில் அமர்ந்து பருகக் கொடுத்தார். ஆனால், அதனை பருக எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.

இதனிடையே, தன்னை அவமதித்தவர்களுக்கு தேநீர் பரிமாற நினைத்தது மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷின் பெருந்தன்மையை காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரிவன்ஷை பாராட்டுவதில் மக்களோடு இணைவதாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்