‘காதலில் எல்லாமே நியாயம்தான்.!’ .. ஆணாக மாறி மாணவியை திருமணம் செய்த ஆசிரியை.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது மாணவியை திருமணம் செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் ஆணாக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர்.. விஸ்வரூபம் எடுக்கும் தன்பாலின கலாச்சார விவகாரம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு சம்பவம் தானாம்..!

ராஜஸ்தான் மாநிலம், நாக்லாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துவரும் பெண் மீரா. ராஜஸ்தான் தீக் நகரில் வசிக்கும் இவர், அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது மாணவி அதே பள்ளியில் படித்து வந்தார். தாமது மாணவியை பார்த்ததுமே மீராவுக்கு அவர் மீது தன்பாலின ஈர்ப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

மேஜரான அம்மாணவிக்கும், இந்த ஆசிரியை மீராவுக்கும் காதல் உணர்வு இருந்த வந்த நிலையில், ஒரு கட்டத்தில் மாணவியை திருமணம் செய்துகொள்ள எண்ணியிருக்கிறார். அதற்கு மாணவியும் சம்மதித்தாக கூறப்பட்ட நிலையில், ஆசிரியை - மாணவி காதலே சமூகத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்கும் நிலையில், இங்கு தன் பாலின ஈர்ப்பு இவர்களின் காதலுக்கும் திருமணத்துக்கும் இன்னும் பேரெதிர்ப்பாக திரண்டது.

இந்த சிக்கலை எதிர்கொள்வதற்காக சிந்தித்த ஆசிரியை மீரா, தனது மாணவியை மணப்பதற்காக தமது பாலினத்தை ஆணாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். ஆம், இதற்காக பல முயற்சிகளுக்கும் சிகிச்சைகளுக்கும் தம்மை உட்படுத்தினார். அதன் பின்னர் ஆணாக மாறிய ஆசிரியை, தனது பெயரை ஆரவ் என்று அவர் மாற்றிக் கொண்டு, கடந்த நவம்பர் 4-ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் கல்பனாவை மணந்தார். அதன் பின்னர் ஊடகங்க மத்தியில் பேசும்போது, “காதலில் எல்லாமே நியாயமே... எனவே என் பாலினத்தையே மாற்றிக்கொண்டுவிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருமணம் குறித்து மாணவி கல்பனா, கூறுகையில், தொடக்கத்தில் இருந்தே தமது ஆசிரியை மீது தமக்கு அன்பு இருந்ததாகவும், ஆசிரியை மீரா ஆணாக மாறுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருந்திருந்தாலும் கூட, தாம் அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மாநில அளவிலான கபடி வீராங்கனையான கல்பனா , அடுத்த வருடம், துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

Also Read | IPL 2023 ஏலம்.. எங்கே, எப்போ நடக்க போகுது?.. வெளியான தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

RAJASTHAN, RAJASTHAN WOMAN TEACHER, WOMAN TEACHER TURNS MALE, MARRY, STUDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்