”வீட்ல சிக்னல் கிடைக்கல... ஆனா, ’ஆன்லைன்’ கிளாஸ் அட்டண்ட் பண்ணனும்...”’ - தினமும் மலை ஏறி, உச்சிக்கு சென்று படிக்கும் ’சின்சியர்’ மாணவன் - குவியும் பாராட்டுகள்!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளது. இதன் காரணமாக, நாடெங்கும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முடங்கிப் போயுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டி, ஆன்லைன் வகுப்புகளை பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் நடத்தி வருகின்றன. இதனால், வீட்டிலுள்ள சில மாணவர்கள் வீட்டில் நெட்வொர்க் வசதி கிடைக்காத காரணத்தால் பல்வேறு சிரமங்களுடன் ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டி, மலையுச்சியின் மீது அமர்ந்து கலந்து கொண்டு வருகிறார். ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோத்யா வித்யாலயா என்ற பள்ளியில் படித்து வருபவர் ஹரிஷ். இவரது பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தது முதலே, மலையுச்சியை தான் ஹரிஷ் தேர்வு செய்து பாடங்களை கற்று வருகிறார்.

வீட்டில் நெட்வொர்க் பிரச்சனை உள்ள காரணத்தினால் தான் மலையுச்சியில் அமர்ந்து படிக்க ஹரிஷ் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் தந்தை வீராம்தேவ், 'பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தொடங்கியது முதல் காலை 8 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டு, மலை மீது ஏறி வகுப்புகளை கவனித்து விட்டு மதியம் சுமார் 2 மணியளவில் தான் வீட்டிற்கு திரும்ப வருவார்' என தெரிவித்துள்ளார்.

கல்வி மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, தனது முன்பிலுள்ள தடைகளை உடைத்து மலை மீது ஏறி படிக்கும் சிறுவனுக்கு பாராட்டுக்கள் எங்கும் குவிந்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்