'இதெல்லாம் தப்பில்ல'..தோழியை 'திருமணம்' செய்ய.. பெண்ணுக்கு உதவிய போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது கல்லூரி தோழியை திருமணம் செய்ய விரும்பிய பெண்ணுக்கு,போலீசார் உதவி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் கல்லூரி படித்து வந்த இரு தோழிகள் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.இவர்கள் நட்பை இருவரது வீட்டிலும் தவறாக நினைக்கவில்லை.சில வருடங்களாக நல்ல தோழிகளாக இருந்த இருவரும் ஆண்களுடன் அதிகம் பேசி,பழகியதில்லை.நன்றாகவும் படித்ததால் இருவரது வீட்டிலும் இவர்கள் நட்பை பெருமையாக கருதியுள்ளனர்.
நாளடைவில் தோழிகளின் நெருக்கம் மிகவும் அதிகமாகவே,பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவரையும் விசாரித்துள்ளனர்.அப்போது நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என இருவரும் தெரிவித்துள்ளனர்.இதனை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
ஆனால் போலீசார் சட்டமே இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்று இருவரின் பெற்றோர்களிடமும் எடுத்துக் கூறினர்.தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இரண்டு பெண்களும் போலீசாரிடம் கேட்க,போலீசாரும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.இதைத்தொடர்ந்து பெண்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து வசிக்கத் துவங்கியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மர்ம கும்பலால் இளைஞர் கொடூரக் கொலை’.. ‘பைக்கில் கட்டி 15 கிமீ இழுத்துச் சென்ற பயங்கரம்’..
- 'வீட்டைவிட்டு ஓடுனதுக்கு'..புருஷன் தான் காரணம்.. இனி அவரோட வாழ மாட்டேன்!
- '27 வழக்கு.. அதுல 8 கொலைவழக்கு '.. சென்னையில் சிக்கிய பிரபல தாதா.. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு!
- 'மருமகனுடன் உல்லாசம்'..தீயாகப் பரவிய வீடியோ..போலீஸ் புகார்!
- ‘ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’..
- தப்பிக்கவா விடுறீங்க?..அரை 'நிர்வாணமாக' 2 கிலோமீட்டர் 'நடக்க' வைத்த போலீஸ்!
- 'கண்டிப்பா' ஜெயிக்கிறேன்..பெண் 'அதிகாரியை' கட்டிப்பிடித்து 'திடீர்' முத்தம்!
- 'கிட்ட வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்பேன்.. நாட்டு வெடிகுண்டுடன் இளைஞர் செய்த காரியம்.. பதறவைக்கும் வீடியோ!
- ‘கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடன்’.. ‘விரட்டியடித்த சிறுமியின்’.. ‘துணிச்சலுக்கு குவியும் பாராட்டுகள்’..
- 'இந்த கோலத்துல உன்ன பாக்கவா சென்னைக்கு அனுப்புனேன்'...'கதறிய தாய்'...ஹெச்.ஆர் இறந்தது எப்படி?