இப்டி ஒரு மாமியார் தாங்க வேணும்.. தாய் ஆகவே மாறி.. மருமகளுக்காக செய்த காரியம்.. ரோல் மாடலாக மாறிய பெண்மணி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் : கணவரை இழந்து, நிர்கதியாக நின்ற மருமகளை, கூடவே இருந்து தட்டிக் கொடுத்து, மாமியார் செய்த காரியம், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

பஞ்சாப் நேஷனல் வங்கி பதஞ்சலி இணைந்து அறிமுகம் செய்துள்ள ரூபே கிரெடிட் கார்டு.. என்னெல்லாம் சலுகைகள்?

பொதுவாக, மாமியார் - மருமகள் என்றாலே, மாறி மாறி முட்டிக் கொண்டிருக்கும் செய்திகளை தான் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அப்படியே நேர்மாறாக, பல மாமியார்களுக்கு முன் மாதிரியாக நிற்கும் ஒரு பெண்மணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பதேபூர் ஷேகாவதி என்னும் பகுதியில் வசித்து வருபவர் கமலா தேவி. இவரது இளைய மகன் பெயர் சுபம். கிர்கிஸ்தான் நாட்டில், தங்கியிருந்து எம்.பி.பி.எஸ் படித்திருந்த சுமனுக்கும், சுனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது.

மாமியார் எடுத்த முடிவு

இதனிடையே, திருமணமான சில மாதங்களிலேயே, விபத்து ஒன்றில் சிக்கிய சுமன், பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சமயத்தில், பட்டப்படிப்பு படித்து வந்த சுனிதா, கணவரின் எதிர்பாராத மரணத்தால், நிலை குலைந்து போனார். இன்னொரு பக்கம், மகன் உயிரிழந்த காரணத்தினால், மருமகளின் வாழ்க்கை நிர்மூலமாகி விடக் கூடாது என்பதில், கமலா தேவி உறுதியாக இருந்துள்ளார்.

சிறந்த வழிகாட்டி

இதனைத் தொடர்ந்து, மருமகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த கமலா தேவி, அவரின் பட்ட படிப்பை தொடர வைத்தார். அத்துடன் நிறுத்தி விடாமல், மருமகள் நல்ல வேலையில் தகுதி பெற வேண்டும் என்பதற்காக, சுனிதாவை போட்டி தேர்வுகளில் பங்கேற்கவும் கமலா தேவி ஊக்கப்படுத்தியுள்ளார். மாமியாரின் வழி படி, மருமகள் சுனிதா மேற்கொண்ட முயற்சியும் அவருக்கு கை கொடுத்துள்ளது.

மருமகளுக்கு மறுமணம்

ஆம். போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற சுனிதாவிற்கு அரசு பள்ளிக் கூடம் ஒன்றில், ஆசிரியை பணி கிடைத்தது. சுரு என்னும் மாவட்டத்தில் ஆசிரியையாக, சுனிதா தற்போது பணிபுரிந்து வருகிறார். மருமகள் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகும், தன்னுடைய கடமையை கமலா தேவி நிப்பாட்டிக் கொள்ளவில்லை. மறுமணம் செய்து கொண்டு, மருமகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என முடிவு செய்த கமலாதேவி, சமீபத்தில் முகேஷ் என்ற நபருக்கு, சுனிதாவை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தை மிகவும் ஆடம்பரமான முறையிலும் கமலா தேவி நடத்தியுள்ளார்.

முன்மாதிரி திகழும் கமலாதேவி

தன்னுடைய மருமகளுக்கு ஒரு சிறந்த தாயாகவும், அதே வேளையில், மறுமணம் பற்றிய விஷயத்தில், சமூகத்திற்கு ஒரு முன் மாதிரியாகவும் கமலாதேவி இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். இது பற்றி பேசும் கமலா தேவி, 'என் மகன் சுபம், சுனிதாவை ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்து விட்டு, தான் விரும்புவதாக எங்களிடம் தெரிவித்தான். நாங்கள் சுனிதாவை பற்றி விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது, பொருளாதார ரீதியாக, நல்ல நிலையில் அவர்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டோம்.

சொந்த மகள்

அப்படி இருந்தும், அவர்கள் வரதட்சணை தர முன் வந்தார்கள். ஆனால், நாங்கள் அதனை நிராகரித்து விட்டோம். திருமணமாகி எங்களின் வீட்டிற்கு வந்த பிறகு, பக்குவப்பட்ட பெண்ணாக நடந்து கொண்டாள்' என கமலா தேவி தெரிவித்துள்ளார். கமலா தேவியின் மூத்த மகன் ரஜத் பங்காரா பேசுகையில், 'என் சகோதரன் சுபம் இறந்த பிறகு, சுனிதாவை, எங்கள் வீட்டில் பிறந்த குழந்தை போலவே எனது தாய் பாவித்தார். சுனிதாவும், அவருக்கு கீழ்படிந்து அன்பாக நடந்து கொண்டார்' என கூறியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில், மாமியார் - மருமகள் இடையே பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கேள்விப்பட்டு வரும் நிலையில், மருமகளுக்கு சிறந்த ஒரு தாயாக மட்டுமில்லாமல், சமூக மாற்றத்திற்கான முன் மாதிரியாகவும், கமலா தேவி திகழ்வது பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

பஸ் ஸ்டான்ட் டாய்லெட் உள்ளே நுழைந்தபோது.. அங்கு இருந்ததைக் கண்டு ஷாக் ஆன பொதுமக்கள்.. இதெல்லாம் எப்படி இங்க வந்துச்சு?

RAJASTHAN, MOTHER IN LAW SUPPORTS HER DAUGHTER IN LAW, ராஜஸ்தான், பெண்மணி, மாமியார், மருமகளுக்கு மறுமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்