"எல்லாத்துக்கும் இந்த குரங்கு தான் சார் காரணம்.." போலீசார் கொடுத்த விளக்கம்.. அதிர்ந்து போன நீதிமன்றம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில், நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ள கருத்து, கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

கடந்த 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான சந்த்வாஜி என்னும் பகுதியில் வைத்து சஷிகாந்த் வர்மா என்பவர் இறந்து போனது பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஷிகாந்த் கிடைப்பதற்கு மூன்று நாட்கள் முன்பாக, அவர் காணாமல் போனதாக கூறி அவரின் குடும்பத்தினர் புகார் ஒன்றை அளித்திருந்தனர்.

கொலை தொடர்பான விசாரணை

இதனையடுத்து, சஷிகாந்த் உடல் மீட்கப்பட்ட பிறகு, அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி, குடும்பத்தினர் டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அந்த சமயத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. போராட்டம் நடந்து, சுமார் 5 நாட்கள் கழிந்த பின்னர், சஷிகாந்த் கொலை தொடர்பாக, ராகுல் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரை போலீசார் கைதும் செய்துள்ளனர்.

ஆதாரங்கள் எங்கே?

கூடுதல் நீதிமன்றத்தில், இவர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட போது, கொலைக்கான ஆயுதம் உட்பட, இந்த வழக்கில் தொடர்புடைய 15 முக்கியமான ஆதாரங்கள் அடங்கிய பை, காவல் நிலையத்தில் உள்ள மரத்தடியில் வைக்கப்பட்டிருந்தாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணையில், தற்போது நீதிமன்றம் போலீசாரிடம் ஆதாரங்களை சமர்ப்பிக்க சொல்லி கேட்ட போது, மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த ஆதாரங்கள் அடங்கிய பையினை குரங்கு தூக்கிக் கொண்டு ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குரங்கு எடுத்துட்டு போய்டுச்சு..

அது மட்டுமில்லாமல், தங்களிடம் இருந்த ஆதாரங்கள், குரங்கினால் திருடப்பட்டதாக கீழ் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் போலீசார் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. போலீசாரின் அறிக்கையைக் கண்டு, காவல்துறைக்கு நோட்டீஸ் ஒன்றையும் நீதிமன்றம் அனுப்பி உள்ளது.

மேலும், இந்த ஆதாரம் காணாமல் போனதாக அப்போது பணியில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் ஓய்வு பெற்று இறந்து விட்டதாகவும் போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

RAJASTHAN, POLICE, COURT, MONKEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்