காங். அமைச்சரை சிக்க வைக்க மாடல் அழகி மூலம் மாஸ்டர் பிளான்! ஹோட்டல் அறையில் விபரீதம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் : ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து, மாடல் அழகி ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயன்ற நிலையில், இதற்கான காரணம் பற்றி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

நீட் விவகாரம்.. ஆளுநர் என்ன போஸ்ட் மேனா? .. வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலி. இவரது காதலர் அக்ஷித். இவருக்கு, சினு, நிக்கின் என பல் பெயர்களும் உண்டு.

தீபாலி மற்றும் அக்ஷித் ஆகிய இருவரும் மாடலிங் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். மாடல் அழகிகளுக்கு பயிற்சியளித்து, அவர்களை விளம்பர படங்களில் நடிக்க வைப்பதும், போட்டோஷூட் நடத்துவதும் தான் இவர்களின் வேலை.

Honey Trap

மாடலிங் துறை வேலை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், தீபாலி மற்றும் அக்ஷித் ஆகியோர் இணைந்து, வேறு ஒரு தொழிலையும் செய்து வந்துள்ளனர். பிரபலங்களுடன் மாடல் அழகிகளை நெருக்கமாக பழக வைத்து, அதனை வீடியோவாக எடுத்து, அதன் பெயரில், மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 'Honey Trap' விவகாரம் மூலம், கடந்த 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில், அக்ஷித் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பிரபலத்தை தீபாலி - அக்ஷித் ஆகியோர் குறி வைத்துள்ளனர்.

அமைச்சர் ராம் லால்

ராஜஸ்தான் மாநிலத்தின் வருவாய் துறை அமைச்சர் ராம் லால் ஜாட்டைத் தான் சிக்க வைக்க இவர்கள் முயற்சி செய்துள்ளனர். இதற்காக, குங்கன் உபாத்யாயா என்ற மாடலை தொடர்பு கொண்டுள்ளனர். அமைச்சரை ஏமாற்றும் திட்டத்தையும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். முதலில், இதற்கு குங்கன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், பிறகு பணத்தின் பெயரிலும், அதிக விளம்பர படங்கள் தரலாம் என்றும் கூறி, சம்மதிக்கவும் வைத்துள்ளனர்.

பத்திரிகையாளர் என அறிமுகம்

இதன் பின்னர், குங்கன் குளிக்கும் வீடியோவையும் அந்த ஜோடி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்த அமைச்சர் ராம் லால், உதய்பூர் பகுதியில், ஹோட்டல் ஒன்றில் தங்கியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், அக்ஷித் அமைச்சரின் உதவியாளரிடம், பத்திரிகையாளர் என அறிமுகபடுத்தி, இரண்டு பெண்கள் சந்திப்பதற்கும் நேரம் கேட்டுள்ளார்.

இரவு நேரம் ஆனதால், மறுநாள் காலையில், அவர்களை சந்திக்கிறேன் என்றும் அமைச்சர் ராம் லால் ஜாட், உதவியாளரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, மறுநாள் வந்தவர்கள், அமைச்சரை வலையில் வீழ்த்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், அமைச்சர் எந்த விபரீதத்திலும் சிக்கவில்லை.

மாடலுக்கு மிரட்டல்

இதன் பெயரில், அமைச்சரை வலையில் விழ வைக்கவில்லை என்றால், நீ குளிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என குங்கனை, அக்ஷித் மற்றும் தீபாலி ஆகியோர் மிரட்டியுள்ளனர். இதனால், செய்தவறியாமல் தவித்த குங்கன், கதறி அழுதுள்ளார். இதன் காரணமாக, அதிகம் மன உளைச்சல் அடைந்த குங்கன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ஹோட்டலின் 7 ஆவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் படுகாயம் ஏற்பட்ட குங்கன், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிர்ந்து போன அமைச்சர்

பின்னர், குங்கனிடம் நடத்திய விசாரணையின் பெயரில் தான், தீபாலி மற்றும் அக்ஷித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னை வலையில் வீழ்த்த வேண்டி, நடந்த முயற்சிகள் பற்றி அறிந்து கொண்ட அமைச்சர் ராம் லால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், 'அன்றைய இரவு, ஆண் ஒருவர் எனது உதவியாளருக்கு போன் செய்து, என்னை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர். நேரமாகி விட்டதால், மறுநாள் சந்திக்கும் படி நான் கூறினேன். முன்னதாக, அவர் மீடியாவைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மறுநாள் காலையில் என்னை சந்தித்த அவர்கள், ஒரு ஆவணத்தைக் காட்டி, அதிலுள்ள பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால், என்னுடைய துறையைச் சேர்ந்தது அல்ல என கூறி நான் மறுத்து அவர்களை அனுப்பி விட்டேன். ஆனால், இதன் பிறகு இவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

மாநில அமைச்சர் ஒருவரை அவருக்கே தெரியாமல், வலையில் வீழ்த்த திட்டம் போட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"தோனியோட வெறித்தனமான ரசிகன் நான்.." சிஎஸ்கே டீம்'ல ஆடணும்.." 'குழந்தை' போல ஆசைப்படும் இளம் வீரர்.. தட்டித் தூக்குமா சென்னை?

RAJASTHAN, BLACKMAIL, MINISTER, RAJASTHAN MODEL, மாடல் அழகி, ராஜஸ்தான், காதலர், வருவாய் துறை அமைச்சர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்