யூடியூப் Scroll பண்றப்போ.. எதேச்சையா கூலி தொழிலாளி பாத்த வீடியோ.. "அடுத்த ஒரு வருஷத்துல அவரு பணக்காரானாவே மாறிட்டாரு.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கூலி தொழிலாளியாக இருந்து வந்த ஒரு நபரின் வாழ்க்கை, ஒரே ஒரு வீடியோவால் மாறிய சம்பவம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ராத்திரி 2 மணிக்கு கத்திய பூனை.. அரை தூக்கத்துல எழுந்து பார்த்த உரிமையாளர்.. "அடுத்து நடந்தது தான்.." பரபரப்பு சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம், ஜலூர் மாவட்டத்தில் உள்ள பல்தி கிராமணி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பவாராம். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், குஜராத் மாநிலத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

மிகவும் கடினமாக அவர் உழைத்து வந்தாலும், தன்னுடைய உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை என்றும் பலமுறை பவாராம் வேதனை அடைந்து வந்துள்ளார். மேலும், தனது வேலையில் கிடைக்கும் சம்பளம், தண்டு செலவுக்கே போதவில்லை என்றும் அவர் நினைத்துள்ளார்.

அப்படி ஒரு சமயத்தில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக Youtube-இல் வீடியோக்களை பவாராம் பார்த்து கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், அவர் கண்ணில் பட்ட வீடியோ ஒன்று அவரது வாழ்க்கையே தலைகீழாக திருப்பிப் போட்டது. தைவானின் ரெட் லேடி வகை பப்பாளி சாகுபடி குறித்து வீடியோ ஒன்று அவரது கண்ணில் பட்டுள்ளது. மிகக் குறைந்த முதலீடு மூலம் ஏராளமான பணம் சம்பாதிப்பது தொடர்பாக விளக்கம் அதில் கொடுக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர், ரெட் லேடி பப்பாளி பழம் தொடர்பாக வேறு சில வீடியோக்களையும் பவாராம் பார்த்துள்ளார். மிகக் குறைந்த செலவில், அதிக பணம் ஈட்டித் தரும் பப்பாளி பழம் என்பதால், அதே ரூட் பிடித்து களத்தில் இறங்கி உள்ளார் பவாராம். இதனைத் தொடர்ந்து, குஜராத்தில் தைவான் ரெட் லேடி பப்பாளி செடி கிடைப்பதை உறுதி செய்த பவாராம், தனது சொந்த கிராமத்திற்கு ஒரு ரெட் லேடி பப்பாளி செடிக்கு 25 ரூபாய்க்கு வீதம், மொத்தம் 2500 செடிகளையும் அவர் சொந்த ஊருக்கு வாங்கி வந்துள்ளார்.

தொடர்ந்து, கடந்த ஜூன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதத்தில், தைவான் ரெட் லேடி பப்பாளி சாகுபடி, சுமார் 2 1/2 ஹெக்டேர் நிலத்தில் அவர் தொடங்கியுள்ளார். மேலும், தண்ணீர் பயன்பாட்டை குறைப்பதற்காக சொட்டுநீர் முறையையும் பவாராம் பயன்படுத்தி உள்ளார். அத்துடன் கரிம உரங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர், ஆறு மாதங்களுக்குப் பிறகு பழத்தின் உற்பத்தியும் தொடங்கியுள்ளது. தனது பப்பாளி பழத்தை முதலில் மார்க்கெட்டில் சந்தையில் விற்க ஆரம்பித்த போது, பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்பதால், தனது வீட்டுக்கு அருகே வாகனம் ஒன்றில் வைத்து விற்கத் தொடங்கியுள்ளார் பவாராம். இதனால் ஒரு நாளைக்கு சுமார் ஐந்து குவிண்டால் பப்பாளி பழங்களை அவர் விற்று வந்துள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு தனது பப்பாளி சுவையும் பெரிய அளவில் பிடித்ததாக பவாராம் தெரிவித்துள்ளார்.

மேலும், பப்பாளி சாகுபடி காரணமாக தனது வாழ்க்கையை தலைகீழாக திரும்பியதாக குறிப்பிடும் பவாராம், கடந்த ஒரு ஆண்டில், சுமார் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் பப்பாளி பழங்களை விற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு வீடியோவால், கஷ்டப்பட்டு வந்த நபரின் வாழ்க்கை, அப்படியே மாறியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Also Read | "ரெய்னா ஆடுற மேட்ச்'னா மிஸ் பண்ணாம கிரவுண்ட்'ல ஆஜர் ஆயிடுவாரு.." வெறித்தமான ரசிகருக்கு நேர்ந்த துயரம்.. மனம் உடைந்த சின்ன 'தல'!!

RAJASTHAN, MAN, SUCCESS STORY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்