"இது பீட்டர் இங்கிலீஷ் இல்ல..."பாட்டி இங்கிலீஷ்..." 'கெத்து' காட்டும் 'ராஜஸ்தான் அப்பத்தா'... 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தானைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலானோர் கல்வி அறிவு பெறாதவர்களாகவே இன்றளவும் உள்ளனர்.  அவர்கள் கைத்தொழிலை நம்பியே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.  அங்கு ஆண்களை விட கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவிகிதம் மிகவும் குறைவு.

இந்நிலையில் ராஜஸ்தானின் ஜூன்ஜூனு நகரில் வசித்து வரும் பக்வானி தேவி என்ற மூதாட்டி சரளமாக ஆங்கிலத்தில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவரை பேட்டி எடுத்தவர், காந்தி பற்றி கேட்டதும், 'மிகவும் எளிமையான காந்தி, அஹிம்சையை வலியுறுத்தியவர்; உலகின் மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவர்' என துவங்கி, பக்வானி தேவி ஆங்கிலத்தில் மளமளவென பேசுகிறார்.

இந்த வீடியோவை, ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் போத்ரா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோ வெளியான ஒரே நாளில், மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

RAJASTHAN, GRANDMOTHER, SPEAK ENGLISH, FLUENTLY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்