முதியவர்களை தாக்கிய கொரோனா ... அசத்திய ராஜஸ்தான் மருத்துவர்கள் ... பயன்படுத்திய மருந்து என்ன ?
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட மூன்று வயது முதிர்ந்த நோயாளிகளை பல மருந்துகளின் கலவைகள் மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தியதற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரசின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று மூலம் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட மூன்று பேரை மருந்துகள் சிலவற்றின் கலவை கொண்டு குணப்படுத்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 402 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு அதில் 393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஐந்து பேரின் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இத்தாலியிலிருந்து திரும்பிய 69 வயது முதியவர், துபாயிலிருந்து திரும்பிய 85 வயது மூதாட்டி, இத்தாலியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட மூவரும் முதியவர்கள். முதியவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்ற போதும் ராஜஸ்தான் மருத்துவர்கள் அவர்களை மீதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்களை பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகையில், 'எச்ஐவி, மலேரியா, ஸ்வைன் ப்ளூ மருந்துகளைக் கலவையாகப் பயன்படுத்திக் குணப்படுத்தியுள்ளோம். எங்களது இந்த கலவை மருந்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அமைப்பும் அனுமதியளித்தது' என தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊடக மக்களே, பேட்டி எடுக்காதீங்க' ... 'மைக்' மூலமா கொரோனா பரவுதாம் ... கேரள அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு !
- பர்ஸ்ட் 'பூத்'ல போங்க ... அடுத்து உங்க வேலைய பாருங்க ... கொரோனாவைத் தடுக்க கேரள அரசின் 'பிரேக் தி செயின்'!
- 'சென்னை வந்த சாப்ட்வேர் என்ஜினீயர்'...'நவீன கருவி மூலம் சோதனை'...விமான நிலையத்தில் பரபரப்பு!
- 'கொரோனா கிட்ட இருந்து கூட தப்பிச்சுரலாம்' ... 'ஆனா அவங்க கொரோனாவ விட டேஞ்சர்' ... தமிழக அமைச்சரின் கிண்டல் பேச்சு!
- 'ஒரு மாசத்துக்கு மேல உயிர குடுத்து வேல செஞ்சாங்க' ... இத விட வாழ்க்கைல சிறந்த தருணம் எதுவும் இருக்க முடியாது... 'கொரோனா' மருத்துவ பணியாளர்களின் மகிழ்ச்சி வீடியோ!
- 'லாபம்' எதுவும் எங்களுக்கு வேணாம் ... 'மக்களோட' நலன் தான் முக்கியம் ... கேரளாவில் பிரபலமான இரண்டு ரூபாய் 'மாஸ்க்'!
- 'கொரோனா வந்தா என்ன'?... 'நெஞ்சுல நின்னுட்டிங்க டீச்சர்'... ரிஸ்க் எடுத்த ஆசிரியையின் நெகிழ்ச்சி செயல்!
- ஒண்ணும் ஆகாது, தைரியமா இருங்க .... 'பீதி'யில் உறைந்து போன மக்களுக்கு .... தைரியம் தரும் 'சுகாதாரத்துறை'!
- 'கை தட்டல்கள்', 'ஆரவாரங்கள்' இல்லாமல் ... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ... முதல் முறையாக நடந்த சம்பவம் !
- இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'ரசிகர்கள்' இல்லாமல் நடைபெறவுள்ள 'இந்தியா - தென்னாபிரிக்கா' போட்டி ?