மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ.7 கோடி செலவில் கோவில் கட்டிய கணவன்.. ராஜஸ்தானில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற 7 கோடி ரூபாய் செலவழித்து கோவில் ஒன்றை கட்டியுள்ளார் கணவர். இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "ஆன்லைனில் பணம் அனுப்புறேன்".. ஸ்மார்ட் டிவியை திருடிச்சென்ற ஸ்மார்ட் இளைஞர்...!
சந்தோஷி மாதா
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கேதர்பாஷி லெங்கா. இவர் சொந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி பைஜந்தி லெங்கா. இருவரும் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். இவர்களுள் பைஜந்தி சிறுவயது முதலே சந்தோஷி மாதாவை மிகுந்த அக்கறையோடு வழிபட்டு வந்திருக்கிறார்.
பொதுவாக வட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சந்தோஷி மாதா வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். வருடத்தில் 16 வார வெள்ளி கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து சந்தோஷி மாதாவை வழிபடுகின்றனர். வட இந்திய மாநிலங்களில் இந்த விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்தோஷத்தை அளிக்கும் பெண் கடவுள் என குறிப்பிடப்படும் சந்தோஷி மாதாவின் தீவிர பக்தையாக இருந்துள்ளார் பைஜந்தி.
Images are subject to © copyright to their respective owners.
ஆசை
இந்த நிலையில், தங்களது சொந்த ஊரில் சந்தோஷி மாதாவிற்கு கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசை பைஜந்திக்கு வெகுநாட்களாகவே இருந்து வந்திருக்கிறது. இதனையடுத்து, தனது கணவர் கேதர் பாஷியிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார் பைஜந்தி. தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த கேதர் பாஷி உடனடியாக இதற்கான பணிகளில் இறங்கியுள்ளார்.
அதன்படி தனது மனைவியின் பூர்வீக கிராமமான மனிதாப்பூரில் கோவில் கட்டுமான பணிகளை துவங்கியுள்ளார் கேதர் பாஷி.
Images are subject to © copyright to their respective owners.
7 கோடி ரூபாய்
15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சந்தோஷி மாதாவின் திருக்கோவில் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த கோவிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளுக்காக உள்ளூர் மற்றும் தமிழகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த சிற்பிகளை வரவழைத்திருக்கிறார் கேதர் பாஷி. இந்த கோவில் கட்டுமானத்திற்கு அவர் இதுவரையில் 7 கோடி ரூபாய் செலவும் செய்திருக்கிறார். தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற கோவில் கட்டிய கணவரின் செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
Also Read | பிரிந்து சென்ற மனைவியை சமாதானப்படுத்த வாட்டர் டேங்கில் ஏறிய கணவன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என் மனைவியும், உங்கள் கணவரும் திருமணம் செஞ்சுகிட்டாங்க".. பாதிக்கப்பட்ட கணவன் & மனைவி எடுத்த பரபரப்பு முடிவு
- "மனைவிகிட்ட போக கூடாது, 3 வருஷம் பேசவே கூடாது".. வீடியோவால் சிக்கிய கணவன்.. கோர்ட் வழங்கிய பரபர தீர்ப்பு!!
- "வாழ்வு, சாவு ரெண்டுலையும் ஒன்னா தான் இருப்போம்".. கணவரை தொடர்ந்து மனைவிக்கும் நேர்ந்த துயரம்!!... சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!
- மரணத்திலும் ஒன்று சேர்ந்த தம்பதி.. கணவன் உயிரிழந்த கொஞ்ச நேரத்தில் மனைவிக்கு சேர்ந்த சோகம்..!
- "உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன்".. வேலைக்கு போயிட்டு வர்ற் மனைவி வீடியோவை எடிட் செஞ்சு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி வீடியோ!!
- திருமண தேதி என்ன?.. திருதிருன்னு முழிச்ச கணவன்.. கோபத்துல மனைவி செஞ்ச பகீர் காரியம்..!
- கணவர் இழப்பால் கதறித் துடித்த மனைவி.. அழுதுகிட்டு இருக்கும் போதே பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
- "அட, இதைக்கூட டாட்டூ போட முடியுமா?.. அன்பு மனைவிக்கு கணவனின் சர்ப்ரைஸ்.. "இப்படியும் இருக்க முடியும்ன்னு ஏங்க வெச்சுட்டாப்ல"
- லாட்டரியில் விழுந்த ரூ.12 கோடி.. EX-க்கு கிஃப்ட் கொடுக்கப்போய்.. மனைவியிடம் சிக்கிய கணவன்.. சோனமுத்தா மொத்தமும் போச்சா..
- "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்".. 35 வருட காதல் மனைவிக்காக பைக்கில் கணவர் ஒட்டிய ஸ்டிக்கர்!!