'ரேபிட் டெஸ்ட்' பரிசோதனையை நிறுத்திய ராஜஸ்தான்...! 'இதனால தான் ஸ்டாப் பண்ணிருக்கோம்...' சுகாதார அமைச்சர் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் சோதனை செய்யும் பணியை நிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரகு சர்மா தெரிவித்த செய்தி அம்மாநிலமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் ராஜஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை சுமார் 1,628 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 205 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் மற்றும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விரைவாக சோதனை செய்யும் வகையில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பாதிப்புகளின் அடிப்படையில் எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பரிசோதனைக்கு உபயோகிக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் கொரோனா பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா, ஏற்கனவே கோவிட் -19 உறுதிப்படுத்தப்பட்ட 168 நோயாளிகளுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5.4 சதவீதம் பேருக்கு மட்டும் தான் கொரோனா தொற்று உள்ளதாக தவறான முடிவுகள் காட்டியது. இதனால் தற்போது ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் எனவும் இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) பரிந்துரைகளுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் எஸ்.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் மருத்துவர்கள் கோவிட் 19 நோயாளிகளுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் நோயின் தீவிரத்தை அறிய முயற்சி செய்துள்ளனர். அதில் வெளிவந்த முடிவுகளில் அதிருப்தி அடைந்த அவர்கள், சோதனைகளை நிறுத்துமாறு எங்களுக்கு அறிவுறுத்தினர் என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் சர்மா.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிளாஸ்டிக் பைகளில் எச்சில் துப்பி'.. 'வீடுகளுக்குள் எறிந்து செல்லும் பெண்'!.. 'வெளியான சிசிடிவி காட்சிகள்'!
- ’மகனின் சிகிச்சைக்காக ஒட்டகப்பால்...’ அழுத தாயின் வேண்டுகோளை ஏற்று... 'மாநிலம்' கடந்து உதவி செய்த "ஐபிஎஸ்" அதிகாரி!
- 'செல்ஃபோனை' கைகளில் 'பிடித்தபடி'... 'கண்ணீர் மல்க' அமர்ந்திருந்த 'நர்ஸ்'... 'வீடியோ' காலில் அம்மாவின் 'இறுதிச்சடங்கு'...
- 'புதிதாக பாதிப்புகள் எதுவும் இல்லை' ... 'இந்தியா'வுக்கே முன்னோடியாக விளங்கும் "அதிசய" மாவட்டம்! ... 'கொரோனா'வை கட்டுப்படுத்தியது எப்படி?
- '135 கி.மீ.,' உணவின்றி நடந்தே சென்ற 'கூலித் தொழிலாளி...' 'ஊரடங்கு' உத்தரவு காரணமாக.... 'போக்குவரத்து' முடக்கப்பட்டதால் 'நேர்ந்த பரிதாபம்'...
- '50 மணி நேரம்...' '2,500 கிலோமீட்டர்...' '5 மாநிலங்களைக் கடந்து...' ஆச்சரியமூட்டும் 'சாகசப் பயணம்...' 'மகளை' மீட்ட 'தந்தையின்' பாசப் 'போராட்டம்'...
- முதியவர்களை தாக்கிய கொரோனா ... அசத்திய ராஜஸ்தான் மருத்துவர்கள் ... பயன்படுத்திய மருந்து என்ன ?
- "இது பீட்டர் இங்கிலீஷ் இல்ல..."பாட்டி இங்கிலீஷ்..." 'கெத்து' காட்டும் 'ராஜஸ்தான் அப்பத்தா'... 'வைரல் வீடியோ'...
- ‘28 பேருடன்’ புறப்பட்ட பேருந்து... திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தத்தால் ‘ஓடிவந்த’ ஊர்மக்கள்... ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில் நடந்து முடிந்த ‘கோரம்’...
- டேய் மகனே 'காங்கிரஸ்'... வாட் டாடி... சாப்பிட்டியா காங்கிரஸ்... எஸ் டாடி... ராஜஸ்தானில் ருசிகரம்...