"கல்யாணம் ஆகி 54 வருஷம் ஆயிடுச்சு.." மூன்றாவது முயற்சியில் நடந்த அதிசயம்.. உச்சகட்ட ஆனந்தத்தில் 70's தம்பதி
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் ஆனதும், பலரும் தங்களின் அடுத்த தலைமுறை உருவாக குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
இதில், பலருக்கு உடனே குழந்தைகள் கிடைத்து வந்தாலும், சிலருக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டி வரும். அப்படி வரும் சூழ்நிலையில், மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, தங்கள் வாழ்நாளை இனிதாகவும் மாற்றவும் அவர்கள் முயற்சிப்பார்கள்.
அந்த வகையில், திருமணமாகி சுமார் 54 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய தம்பதிக்கு நடந்துள்ள சம்பவம், பலரையும் நெகிழ வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்னும் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் கோபிசந்த் (வயது 75). இவரது மனைவியின் பெயர் சந்திராவதி (வயது 70). இவர்களுக்கு திருமணமாகி 54 ஆண்டுகள் ஆகி விட்டது. இருந்தாலும், இந்த ஜோடிக்கு குழந்தைகள் கிடையாது. அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவினர் வழியாக கருவுறுதல் மையம் ஒன்றை கோபிசந்த் நாடி உள்ளார். முன்னதாக, பெருநகரங்களில் உள்ள நிறைய மையங்களுக்கு சென்றும் அது பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் பின்னர், ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் உள்ள கருவுறுதல் மையத்திற்கு சென்றுள்ளனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, மூன்றாவது முயற்சியில் IVF மூலம் சந்திராவதியால் கருத்தரிக்க முடிந்ததாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் மகிழ்ச்சியை உருவாக்கி இருந்தாலும், மறுபுறம் வயது முதிர்வின் காரணமாக ஒரு பக்கம் பயமும் இருந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், ஆரோக்கியமான குழந்தை ஒன்றையும் சந்திராவதி பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்ததால் உற்சாகமடைந்த தந்தை கோபிசந்த், "எனது பெற்றோர்களுக்கு நான் ஒரே மகன். அப்படி இருக்கும் போது எனது குடும்பத்தை முன்னெடுத்து செல்ல முடிந்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் ஆபத்துள்ள ஒரு சமயத்தில் கூட, IVF மூலம் 70 வயது மூதாட்டி ஒருவர், குழந்தையை பெற்றுள்ள சம்பவம், பலரையும் நெகிழ வைத்துள்ளது. முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து, ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு IVF தொடர்பாக சிகிச்சை மேற்கொள்ள அரசு தடை விதித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே சந்திராவதி கருவுற்றது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமில்லாமல், இந்த வயதில் குழந்தை பெற்றெடுப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று தான். அப்படி இருந்தும் தற்போது தடைகளை தாண்டி வென்றுள்ளார் தாய் சந்திராவதி.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 35 வருஷமா அமெரிக்க காவல்துறைல இருந்த உளவாளி?.. இவ்வளவு நாளுக்கு அப்பறம் சிக்கிய தம்பதிகள்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரே போட்டோ தானாம்.!
- வாடகை வீட்டை உரிமை கொண்டாடிய பெண்.. மனைவியுடன் மாடிப்படியில் தஞ்சம் அடைந்த உரிமையாளர்.. கடைசில நடந்த சூப்பர் டிவிஸ்ட்..!
- "என்னது, எல்லா குழந்தைக்கும் இப்டி தான் பேரு வெச்சு இருக்காங்களா??.." வியப்பை ஏற்படுத்திய தம்பதி..
- "இப்டி ஒரு அன்புக்கு தான்யா ஏங்கிட்டு இருக்கோம்.." சில்லென மழையிலும் சிலிர்க்க வைத்த தள்ளாடும் தம்பதி.. நெட்டிசன்களை உருக வச்ச வீடியோ..
- "புதுசா வீடு வாங்கி, வேல பாத்தப்போ.." தரைக்கு அடியில் கிடந்த பொருள்.. "ஒரு நிமிஷம் அந்த தம்பதிக்கு அள்ளு விட்டுருச்சு"
- நெறய குழந்தைகளை பெத்துக்கங்க..பணத்துக்காக கவலைப்படாதீங்க..ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்..!
- "ஃபர்ஸ்ட் டைம்.." 10 மாச குழந்தைக்கு ரெயில்வே வேலை.. 18 வருசம் கழிச்சு டியூட்டியில சேர்ந்துக்கலாம்.. "என்ன காரணம்.??"
- "நீங்க வாங்குன டிகிரி எல்லாம் வெறும் பேப்பர்".. மெட்ரோ ரயிலில் கீழே உட்கார்ந்து பயணித்த தாய்.. வைரல் கேப்ஷனுடன் ஐஏஎஸ் ஆபிசர் பகிர்ந்த வீடியோ..!
- காதல் திருமணம் செய்துகொண்ட தங்கை.. "விருந்துக்கு வா" என அழைத்து சகோதரர் செஞ்ச காரியம்.. பரபரப்பான கும்பகோணம்..!
- "20 கோடில ஒருத்தருக்கு தான் இப்படி ஒரு அதிசயம் நடக்கும்".. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து மிரண்டுபோன டாக்டர்.. துள்ளிக்குதித்த அப்பா..!