உயிர் போற அளவு வலி.. வயிற்றில் இருந்து எடுக்க எடுக்க வந்த ஏராளமான நாணயங்கள்.. திகைக்க வைத்த சம்பவம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வயிற்று வலி என மருத்துவமனையை நாடிய இளைஞரை சோதித்து பார்த்த மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Advertising
>
Advertising

அவ்வப்போது, வயிற்று வலி அல்லது உடல் வலி காரணமாக, மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்படுவதும், அதன் பின்னர் அவர்களை பரிசோதிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கும் தகவலும், பலரையும் திகிலூட்டும் வகையில் இருக்கும்.

அந்த வகையில் தான், தற்போது ஒரு சம்பவமும் ராஜஸ்தானில் அரங்கேறி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர்  பகுதியில் அமைந்துள்ள மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில், சமீபத்தில் 36 வயதான இளைஞர் ஒருவர், வயிற்று வலி என கூறி மருத்துவர்களை நாடி உள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் உடனடியாக எக்ஸ் ரே பரிசோதனை மேற்கொண்டு பார்த்துள்ளார்கள்.

அப்போது, அவரின் வயிற்றிற்குள், ஏதோ உலோக பொருட்கள் போன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில், மொத்தம் 63 நாணயங்களை அவரின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் மீட்டெடுத்துள்ளனர்.

இதனைக் கண்டதும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், கடும் குழப்பத்தில் ஆழ்ந்து போயினர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், என்டோஸ்கோபி முறையில் அவை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடல் இயக்கத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்ததாகவும் தெரிகிறது.

மீண்டும் அவரை பரிசோதித்து பார்த்த போது, வயிற்றிற்குள் வேறு நாணயங்கள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வயிற்றில் இருந்த நாணயங்களை எடுத்து மேஜையில் வைத்த போது, அது ஒரு குவியல் போலவும் இருந்துள்ளது. பெரும்பாலும் அவற்றுள் ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சில நபர்கள், சற்று மன அழுத்தத்தில் இருக்கும் போது, வினோதமான பொருட்களை தெரியாமல் உண்பார்கள் என்றும், அப்படி இந்த இளைஞரும் சுமார் 63 நாணயங்களை விழுங்கி இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

STOMACH, COINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்