‘28 பேருடன்’ புறப்பட்ட பேருந்து... திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தத்தால் ‘ஓடிவந்த’ ஊர்மக்கள்... ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில் நடந்து முடிந்த ‘கோரம்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் இருந்து சவாய்மதோபூருக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 28 பேர் தனியார் பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்துள்ளனர். இன்று காலை 10 மணியளவில் பேருந்து பந்தி பகுதியில் உள்ள மேஜ் ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் போய்க்கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதையடுத்து தாறுமாறாக ஓடிய பேருந்து நொடிப்பொழுதில் பாலத்திலிருந்து ஆற்றிற்குள் கவிழ்ந்துள்ளது. இதனால் பேருந்தில் இருந்த அனைவரும் அலறித் துடிக்க, சத்தம் கேட்டு ஓடிவந்த ஊர்மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர்.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயமடைந்துள்ள 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததே விபத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- லாரியை 'முந்த' முயன்றபோது.... 'நொடியில்' நேர்ந்த விபரீதம்... சம்பவ இடத்திலேயே 'பலியான' வாலிபர்கள்!
- 'நிச்சயம் மிராக்கிள் தான்'... 'இளைஞர்களின் அசுர வேகம்'... 'ஈசிஆரில்' வீட்டை தும்சம் செய்த கார்!
- ‘அடுத்த வாரம் கல்யாணம்’... ‘பிரிந்து சென்ற காதலியை பழிவாங்க’... ‘வேறலெவலில் யோசித்த இளைஞர்’...
- 'சாலையில் கிடந்த... சடலத்தின் மீது... 12 மணி நேரம் வாகனங்கள் போக்குவரத்து!'... எலும்புத் துண்டுகளாக மீட்கப்பட்ட... நெஞ்சை உலுக்கும் கோரம்!
- ‘காலேஜ் படிக்கும்போது மலர்ந்த காதல்’.. ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த இளம்பெண்.. மதுரை நீதிமன்றத்தில் தஞ்சம்..!
- ‘சுற்றுலா சென்றபோது’... ‘பிரேக் பிடிக்காததால்’... ‘மலைச் சரிவில் வேன் கவிழ்ந்து நேர்ந்த சோகம்’!
- ‘ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்’.. ‘வரப்போகும் புதிய சட்டம்’.. எங்க தெரியுமா..?
- 'Happy Married Life தாத்தா'... 'அப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்'... ஆச்சரிய காரணம்!
- ‘ஒட்டு மொத்த குடும்பத்துடன்’... ‘சாமி கும்பிட வந்தபோது’... ‘7 பேருக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 'மாரத்தான் ஓட்டத்தை கண்காணிக்க சென்றுவிட்டு’... ‘வீடு திரும்பியபோது’... 'மாணவ நண்பர்களுக்கு'... 'சாலையோரத்தில் நிகழ்ந்த பரிதாபம்'!