‘இந்த நேரத்துல அத பண்ணா.. தப்பான முன்னுதாரணமாகிடும்’.. துணை கலெக்டர் எடுத்த முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராய்ப்பூர் துணை கலெக்டர் ஷீட்டல் பன்சால் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்று ஆளாகியுள்ளார். இந்தியாவை பொருத்தவரை 12 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் கூட்டமாக கூட அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிக கூட்டம் இல்லாமல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை கலெக்டர் ஒருவர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமூத் பகுதியை சேர்ந்தவர் ஷீட்டல் பன்சால். இவர் ராய்ப்பூர் மாவடத்தின் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஆயுஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷீட்டல் பன்சால் தனது திருமணத்தை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், எங்கள் திருமணத்தை தற்போது நடத்தி இருந்தால் தவறான முன்னுதாரணாமாக ஆகியிருப்போம் என ஷீட்டல் பன்சால் தெரிவித்துள்ளார்.

CORONA, CORONAVIRUS, RAIPUR, CORONAVIRUSOUTBREAK, WEDDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்