'கண்ணீரில் கடவுளின் தேசம்'... 'ஒரே செகண்டில் சுக்குநூறாகிய வீடு'... நெஞ்சை உலுக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் கொட்டி வரும் கனமழை அங்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 40 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், மசூதி ஆகியவை அடித்து செல்லப் பட்டன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இந்நிலையில் வயநாடு பகுதியில் உள்ள கல்பேட்டா என்ற இடத்தில் இருந்த வீடு ஒன்று இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவில் இதுவரை சுமார் 40 பேரை காணவில்லை என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன.

இதனிடையே, பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, இயல்பை விட 6 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆறுகளின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு, பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

KERALA, KERALAFLOOD, WAYANAD, KALPATTA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்