"என்ன ஏன்யா திட்டுறீங்க.. நான் ஒரு வார்த்த கூட பேசல".. பேர்ல வந்த குழப்பம்.. நேரலையில் நடந்த வேடிக்கை .. வைரல் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நேரலையில் விவாதம் என்பது எப்போதுமே பல சிக்கல்களை உள்ளடக்கியது. நேரலையின் போது நடைபெறும் சிறிய தவறுகள் கூட சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வைரலாகிவிடும். இப்படி பல வீடியோக்களை நாம் பார்த்து இருப்போம். அந்த வகையில் நேற்று டைம்ஸ் நவ் - சேனலில் நடைபெற்ற நேரலை விவாதத்தில் உக்ரேனை சேர்ந்தவர் என நினைத்து ரஷ்ய நபரை அந்த சேனலின் ஆசிரியர் கடுமையாக திட்டிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

உக்ரைன் பிரச்னை

நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த விவாதம் ஒன்றினை நேற்று டைம்ஸ் நவ் சேனல் நேரலையில் நடத்தியது. அதில், ரஷ்யாவை சேர்ந்த மெக்-ஆடம்ஸ் என்பவருக்கு தான் இந்த திட்டு விழுந்திருக்கிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அந்த சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் சிவசங்கர், ஆடம்ஸை கடுமையாக விளாசினார்.

நேரலையின்போது ஆடம்ஸை (அவர் உக்ரேனை சேர்ந்தவர் என நினைத்துகொண்டு),'' இந்தியாவை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு, போரில் வீரர்களுக்கு துணை நில்லுங்கள். இந்த காலனி ஆதிக்க மனநிலை ஆபத்தானது. நீங்கள் ஆப்பிரிக்கா, ஈராக்கிய மக்களை அடக்குமுறை செய்தீர்கள்" என சரமாரியாக ராகுல் பேசி இருக்கிறார்.

பெயரில் வந்த குழப்பம்

அப்போது, ரஷ்யாவை சேர்ந்தவரான ஆடம்ஸ் குறுக்கிட்டு," நான் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்னை ஏன்  நீங்கள் கடுமையாக திட்டுகிறீர்கள்?" எனக் கேட்டார். அப்போதுதான் நடந்த சம்பவமே தெரிய வந்து இருக்கிறது. விவாதத்தில் கலந்துகொண்ட மற்றொரு விருந்தினரான நஹ்யாலோவை நோக்கி ராகுல் தவறான பெயருடன் (ஆடம்ஸ்) பேசி இருக்கிறார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஆடம்ஸ், தான் ஏதும் பேசவில்லை என்றும் எதற்காக திட்டுகிறீர்கள் என்றும் தெரியவில்லை என்றார். அப்போது பதிலளித்த ராகுல்,"நான் உங்களிடம் பேசவில்லை, ஆடம்ஸிடம் பேசுகிறேன்" எனச் சொல்ல, "நான் தான் ஆடம்ஸ்" என ஆடம்ஸ் சொல்ல அனைவரும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.

பிறகு ராகுல் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். நேற்று நடைபெற்ற இந்த விவாத வீடியோ தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

UKRAINE, RUSSIA, VIRALVIDEO, ரஷ்யா, உக்ரைன், வைரல்வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்