Rahul Gandhi : “ராகுலுடன் அமர்ந்திருக்கும் பெண் இவங்களா..?” - யாத்திரையின்போது வைரலான ஃபோட்டோ.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் தற்போது பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களுக்கு இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, கடந்த 11-ம் தேதி முதல், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களைத் தொடர்ந்து ஆலப்புழா என தன் பயணத்தை தொடர்ந்து வருகிறார். பின்னர் புன்னமடகாயலில் வள்ளம்களி என்ற படகுப் போட்டியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி போட்டியாளர்களுடன் சேர்ந்து துடுப்பு போட்டார். ராகுல் அணி இறுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு கோப்பை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடதுசாரித் தலைவர்கள் ஆதரவு தருவது என்பது நிச்சயம் ஒரு தனிமனித ஆதரவு கிடையாது. அவர்கள் ஆதரிப்பது ஒரு கருத்தைதான். இந்த யாத்திரையை பொறுத்தவரை முதலில் காரில் மேற்கொள்ளலாம் என பேசப்பட்டது. ஆனால் கார் யாத்திரை என்றால் வேண்டாம் என நான் மறுத்தேன். காரில் போக முடியாத ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடைப்பயணத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் ராகுல் காந்தியுடன் வளரிளம் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நெட்டிசன்கள் பலரும், யாரு இவங்க, முன்னாள் பிரதமரின் மகனுடன் இவ்வளவு சகஜமாக அமர்ந்திருக்கிறார்? இவர் ராகுல் காந்தியின் கட்சியை சேர்ந்தவரா? இல்லை குடும்பத்தை சேர்ந்தவரா? என்றெல்லாம் கேள்விகளை கேட்டு வந்தனர்.
ஆம், தற்போது வைரலாகும் அந்த ஃபோட்டோவில் ராகுல் காந்தியுடன் இருக்கும் அந்த வளரிளம் பெண், ராகுல்காந்தியின் தங்கையான பிரியங்கா வத்ராவின் மகள் மிராயா வத்ரா என்கிற தகவல் உறுதிபட பலராலும் முன்வைக்கப்பட்டுவருகிறது. மேலும் இந்த ஃபோட்டோ, இப்போது யாத்திரை நேரத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் பலர் கூறி வருகின்றனர். அதன்படி, முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71ஆம் பிறந்தநாள் விழா அவரது நினைவிடத்தில் நினைவேந்தல் நடந்தது.
அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட இந்த ஃபோட்டோவில் ராகுல்காந்தியின் அருகில் இருப்பவர் அவரது மருமகள் மிராயா என்பதை பலரும் உறுதி செய்துள்ளனர்.
Also Read | "பசியோட யாரும் இருக்கக்கூடாது".. ஏழை மக்களுக்கு இலவச உணவு.. உலகத்தையே திரும்பி பார்க்க வச்ச துபாய் அரசர்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இந்த பையனுக்கு ஹெல்ப் பண்ணுங்க".. தனிமையில் பவுலிங் பிராக்டிஸ் செய்த சிறுவன்.. ராஜஸ்தான் CM-க்கு கோரிக்கை வச்ச ராகுல் காந்தி.. வீடியோ..!
- "அங்க சட்டை, வேட்டியெல்லாம் கிழியுது..".. ராகுல் காந்தி பேச்சுக்கு அண்ணாமலை பரபரப்பு பதில் பேச்சு..!
- “பிரச்சனை Uniform பத்தி.. பிகினி போட்டு போறது பத்தி இல்ல”.. Hijab விவகாரத்தில் பிரியங்கா காந்தி கருத்துக்கு குவியும் பதில்கள்
- பார்லிமென்ட்டில் தமிழ்நாடு பற்றிய பேச்சுக்கு முதல்வர் நெகிழ்ச்சி .. பதிலுக்கு ராகுல் காந்தி போட்ட வைரல் ட்வீட்
- அமெரிக்கா வரை எதிரொலித்த ராகுல் காந்தி பேச்சு.. பாகிஸ்தான்-சீனா நட்பு பற்றி தெரிவித்த கருத்துக்கு பதிலடி
- 'அத நான் சொல்லணும்.. நீங்க யாரு?'.. RAHUL GANDHI-க்கு Lok Sabha தலைவர் பரபரப்பு பதில்!
- 2022 -23 பட்ஜெட்: ராகுல் முதல் கமல்ஹாசன் வரை.. மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?
- என் சபதம் நிறைவேறும் நாள் தான்.. செருப்பு போடுவேன்.. வெறும் காலில் 11 வருடங்களாக நடக்கும் இளைஞர்.. என்ன காரணம்?
- எந்த ஒரு பிள்ளைக்கும் 'இப்படி' நடக்க கூடாது...! 'இந்த நாடே உங்க கூட இருக்கு...' - ஷாருக்கானுக்கு ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி...!
- BREAKING: ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி...' என்ன மீட் பண்ணவங்க உடனே 'இத' பண்ணுங்க...! - ட்விட்டரில் வேண்டுகோள்...!