டிரெண்டிங் VIDEO: ”ஒரு பெரிய 'சுனாமியே' வரப்போகுது...!” - திடீரென வைரல் ஆகும் ’ராகுல் காந்தி’ பேசிய வீடியோ... என்ன காரணம்?!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடெங்கிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொடர்ச்சியாக மக்களிடையே விழிப்புணர்வும், கட்டுப்பாடுகளையும் அரசு அமல்படுத்தி வருகிறது.

மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவது மட்டுமே தற்போது நம் முன்னிருக்கும் ஒரே நம்பிக்கையாக உள்ளது. மிகவும் அத்தியாவசியம் என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும், அப்படியே வந்தால் கூட மாஸ்க் அணியாமல் வரக்கூடாது. கைகளை அடிக்கடி சானிடைசர் உபயோகித்து கழுவ வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

தற்போது வந்துள்ள இரண்டாம் அலை சற்று பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒருசாரார் தொற்றின் வீரியத்தை உணராமல் அலட்சியப்படுத்தும் போக்கையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் கொரோனா ஒரு சுனாமியை போன்றது என கடந்த ஆண்டு (17-03-2020) அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெரிய சுனாமியே வருகிறது. நான் மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறேன். என்று தெரிவித்துள்ளார். 

 

இந்த வீடியோ தற்போது டிரெண்டிங் ஆக காரணம் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாம் கொரோனா பரவலை அலை என்று அழைக்கிறோம். ஆனால் இந்த இரண்டாவது பரவல் அலை அல்ல, உண்மையில் இது ஒரு  சுனாமி ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்னரே இந்தியாவும் அதிகமாக பாதிக்கப்படும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்