"எனது வருங்கால மனைவி இப்படி இருக்கணும்".. ஜோடோ யாத்திரையில் மனம் திறந்த ராகுல் காந்தி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி தனது வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் எம்பியும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை மேற்கொண்டுவருகிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில் யாத்திரையை துவங்கிய ராகுல் காந்தி கடந்த 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார். அதன்பிறகு கர்நாடகம், ஆந்திர பிரதேசம் வழியாக பயணம் மேற்கொண்ட அவர் பல மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையவுள்ள ராகுல் காந்தி, செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார். இந்த யாத்திரை 100 நாட்களை கடந்து தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவர் மும்பையில் யாத்திரையில் ஈடுபட்ட போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது தன்னுடைய பாட்டியும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தி தனது அன்புக்குரியவர் என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து அந்த நெறியாளர்,"அப்படியானால் இந்திராகாந்தி போன்ற ஒரு பெண்மணியை சந்தித்தால் திருமணம் செய்துகொள்வீர்களா?" எனக் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி,"இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. எனக்கு மனைவியாக வருபவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால், என் பாட்டி இந்திரா காந்தி மற்றும் எனது தாய் சோனியா காந்தி ஆகியோரின் குணங்களின் கலவையாக இருந்தால் நல்லது" எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களை எப்போதும் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Also Read | வெளிநாட்டில்.. காருக்குள் இருந்த இந்திய இளைஞர் உடல்??.. போனில் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bharat Jodo Yatra : “அரசியலமைப்புக்கு நெருக்கடி என்றால் தெருவில் வந்து நிற்பேன்.” - ராகுல் காந்தி யாத்திரையில் கமல் பேச்சு!
- ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை .. கலந்துகொள்வதாக அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்..!
- குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்.. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ரியாக்ஷன் என்ன?
- யாத்திரை நடுவே பாஜக தொண்டர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி.. வீடியோ..!
- "நோ.. இப்படி ட்ரை பண்ணு".. சிறுவனுக்கு கராத்தே டெக்னிக் சொல்லிக்கொடுத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!
- தெலுங்கானாவில் திம்சா நடனமாடிய ராகுல் காந்தி.. அசந்துபோன பொதுமக்கள்.. வீடியோ..!
- சிறுவனுடன் Push-up சேலஞ்ச்.. சாலையில் தண்டால் எடுத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!
- ராகுலை பாத்ததும்.. திடீர்ன்னு சிறுமி செஞ்ச விஷயம்.. கூட்டத்துக்கு மத்தியில் நடந்த சம்பவம்!!
- Rahul Gandhi : “ராகுலுடன் அமர்ந்திருக்கும் பெண் இவங்களா..?” - யாத்திரையின்போது வைரலான ஃபோட்டோ.!
- "இந்த பையனுக்கு ஹெல்ப் பண்ணுங்க".. தனிமையில் பவுலிங் பிராக்டிஸ் செய்த சிறுவன்.. ராஜஸ்தான் CM-க்கு கோரிக்கை வச்ச ராகுல் காந்தி.. வீடியோ..!