"நோ.. இப்படி ட்ரை பண்ணு".. சிறுவனுக்கு கராத்தே டெக்னிக் சொல்லிக்கொடுத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணத்தின்போது சிறுவன் ஒருவனுக்கு கராத்தே நுட்பங்களை சொல்லிக்கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | இம்ரான் கான் மீது பாய்ந்த துப்பாக்கிக்குண்டு.. பேரணியில் நடந்த விபரீதம்.. உச்சகட்ட பதற்றத்தில் பாகிஸ்தான்..!

காங்கிரஸ் கட்சியின் எம்பியும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை மேற்கொண்டுவருகிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில் யாத்திரையை துவங்கிய ராகுல் காந்தி கடந்த 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார். அதன்பிறகு கர்நாடகம், ஆந்திர பிரதேசம் வழியாக பயணம் மேற்கொண்ட அவர் தற்போது தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையவுள்ள  ராகுல் காந்தி, செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி சிறுவன் ஒருவனுக்கு கராத்தே நுட்பங்களை சொல்லிக்கொடுத்திருக்கிறார். Aikido எனும் தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் பெற்றவரான ராகுல் காந்தி, சிறுவனை தனது இரு கைகளிலும் பஞ்ச் செய்ய சொல்கிறார். அப்போது, சிறுவனது மூவ்மெண்டை திருத்தி மீண்டும் செய்யுமாறு சொல்லவே, சிறுவனும் அப்படியே செய்திருக்கிறான்.

தொடர்ந்து, குட் என சிறுவனை பாராட்டியபடி அங்கிருந்து நகர்ந்து செல்கிறார் ராகுல் காந்தி. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. அப்பதிவில் ,"நுட்பம் தவறினால் நாடு அழிவுப் பாதைக்கு செல்லும். மேலும் இது குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்வி. குழந்தைக்கு சரியான டெக்னிக்கை காட்டுகிறார் ராகுல் காந்தி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று பழங்குடி மக்களுடன் இணைந்து ராகுல் காந்தி திம்சா நடனமாடிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | முதல் முறையாக விமானத்தில் ஏறிய தம்பதி.. பின்னாடி இருந்த பயணி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்!!

TELANGANA, RAHUL GANDHI, KARATE, KARATE TECHNIQUES, JODO YATRA, ராகுல் காந்தி, ஜோடோ யாத்திரை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்