மீண்டும் கிளம்பும் பூதம்!.. ரஃபேல் ஒப்பந்த முறைகேடு... விசாரணையை கையிலெடுத்த ஃப்ரான்ஸ்!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவை உலுக்கிய ரபேல் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 59 கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய 2016ம் ஆண்டு இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
அந்த ஒப்பந்தத்தின் படி, பிரான்சில் இருந்து ஏற்கனவே 23 ரபேல் விமானங்களை இந்தியா பெற்றுள்ளது. 36 ரபேல் போர் விமானங்களும் 2022 ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவிடம் வழங்கப்படும் என்று பிரான்ஸ் டசால்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்காக இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு ஆன்லைன் செய்தி நிறுவனம் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
இதை தொடர்ந்து, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முழுமையான விசாரணை வேண்டும் என்றும், இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு பொது நல வழக்கை விசாரித்து, 2019 நவம்பரில் அதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று கூறியது.
இந்தியாவுக்கும் பிரான்ஸ் விமான உற்பத்தியாளர் டசால்ட்டுக்கும் இடையிலான 36 போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரான்ஸ் பொது வழக்கு சேவைகளின் (பி.என்.எப்) நிதிக் குற்றப்பிரிவு தெரிவித்து இருந்தது.
மீடியாபார்ட் பத்திரிகை மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகள் மற்றும் அதைத் தொடர்ந்து பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஷெர்பா அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஷெர்பா அளித்த இதே போன்ற புகாரை பி.என்.எஃப் 2018 இல் நிராகரித்தது.
குற்றவியல் விசாரணையை ஒரு தன்னிச்சையான நீதிபதி வழிநடத்துவார் என்று மீடியாபார்ட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது ஜனாதிபதி பதவியில் ஹாலண்ட் இருந்தார். தற்போதைய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஹாலண்டின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சராக இருந்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இறந்து' போன மனைவிக்காக கதறித் துடித்த 'கணவர்'... "அவரு மட்டுமா ஒரு 'நாடே' கலங்கிப் போச்சு..." ஆனா, இறுதியில் தெரிய வந்த திடுக்கிடும் 'உண்மை'!!!
- 'மெழுகுவர்த்தி ஒரு பக்கம் மட்டும் உருகி வழிஞ்சா மரணம் தான்!' - ‘விநோத நம்பிக்கையும், வித்யாசமான உணவும்’! விபரம் உள்ளே!
- 'சப்வேயில் இருக்கும் போது ஒருவரிடம் மற்றோருவர் பேசக்கூடாது!'.. 'செல்போன்ல கூட பேசக்கூடாது!'.. இது என்னங்கடா புது ட்விஸ்டா இருக்கு?
- “யாருங்க சொன்னா? நான் உசுரோடா தான் இருக்கேன்.. நம்புங்க!”.. ‘இறந்ததாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண்.. ‘உயிருடன் இருப்பதை நிரூபிக்க’ 3 வருடமாக போராட்டம்!
- 'புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘எல்லையை மூடியதால் பல கிலோ மீட்டர்’... ‘காத்திருக்கும் வாகனங்கள்’... ‘அதிலும் நெகிழ வைத்த மனிதம்’...!!!
- தொழிலதிபர் தொலைத்துவிட்ட, ‘ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஓவியம்!’.. ஆபரேஷனில் இறங்கிய மருமகன்.. கடைசியில் இருந்த இடம் தெரியுமா?
- மரத்தில் தொங்க விடப்படும் ‘மாஸ்குகள்’.. பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நம்பிக்கை.. என்ன காரணம்..?
- ‘ஜனவரி மாதம் முதல்’... ‘இலவசமாக கொரோனா தடுப்பூசி’... ‘அடுத்தடுத்து அறிவிக்கும் நாடுகள்’...!!!
- ‘அண்மையில் கொரோனாவால் மறைந்த பிரான்ஸ் Ex ஜனாதிபதிக்கும், பிரிட்டன் இளவரசி டயானாவுக்கும் இடையில் நடந்தது என்ன?’.. அந்த 'ரொமான்ஸ் நாவல்' பற்றி அவரே கூறியிருந்த ‘சுவாரஸ்ய’ தகவல்!
- மறுபடியும் முழு ‘ஊரடங்கு’.. பதற்றத்தில் சொந்த ஊருக்கு ‘படையெடுத்த’ மக்கள்.. ‘700 கிமீ’ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்.. ‘ஸ்தம்பித்து’ போன நாடு..!