சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் வங்கதேச பெண்ணை திருமணம் செய்த தமிழ் பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கனடாவில் வசிக்கும் தமிழ் பெண் ஒருவர், வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை குடும்பத்தினரின் சம்மதத்துடன் சென்னையில் திருமணம் செய்து கொண்ட நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் வங்கதேச பெண்ணை திருமணம் செய்த தமிழ் பெண்..!
Advertising
>
Advertising

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுபிக்ஷா சுப்பிரமணி என்பவர், தனது குடும்பத்தினருடன் தற்போது கனடாவில் செட்டில் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர் கனடாவில் உள்ள கால்கேரியில் வசித்து வருகிறார். அதேபோல வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் டினா தாஸ். டினாவும் தனது பெற்றோர்களுடன் கனடாவின் கால்கேரி பகுதியில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

queer couple wedding Tamil Woman Marries Bangladeshi in Chennai

இந்நிலையில், தற்போது இவர்களின் திருமணம் சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்துள்ளது. மதுரையில் பிறந்த சுபிக்‌ஷா, பின்னர் கத்தார் நாட்டில் வளர்ந்ததாகவும், இறுதியில் கனடாவுக்கு குடி பெயர்ந்த அவர், தன்னை குறித்து  பெற்றோருக்கு முறைப்படி கவுன்சிலிங் அளித்துள்ளதாக தெரிகிறது, பின்னர் சுபிக்‌ஷாவின் உறவு பற்றியும் அவருடைய பெற்றோர் புரிந்து கொண்டுள்ளனர்.

தொடக்கத்தில் உறவினர்கள் என்ன நினைப்பார்களோ என யோசித்த சுபிக்‌ஷாவின் பெற்றோர், பின்னர் தங்கள் குடும்பத்தின் ஒற்றுமை முக்கியம், மகளின் மகிழ்ச்சியும் முக்கியம் என கருதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுபிக்‌ஷா மற்றும் டினா தாஸ் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்துள்ளது.

QUEER COUPLE WEDDING, TAMIL WOMAN MARRIES BANGLADESHI

மற்ற செய்திகள்