'பிழைப்புக்காக வந்தோம்'... 'ஆனா இப்போ வீடு இல்லாம நடு தெருவுல நிக்குறோம்'... இளம் தம்பதியரின் பரிதாப நிலை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தம்பதியர் தங்கியிருந்த வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலான நிலையில், அவர்கள் தற்போது வீடு இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவைச் சேர்ந்தவர் ஜஸ்பிர் கவுர், இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த சுக்தேவ் சிங் என்பவருடன் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தநிலையில் ஜஸ்பிர் மற்றும் சுக்தேவ் ஆகிய இருவரும் சுற்றுலா விசாவில் இங்கிலாந்து சென்ற நிலையில், சட்டவிரோதமாக அங்குத் தங்கி இருந்துள்ளார்கள். இந்த தம்பதிக்கு 7 மாத குழந்தை ஒன்றும் உள்ளது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தம்பதியர் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஜஸ்பிர், சுக்தேவ் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது. ஆனால் தம்பதியர் மற்றும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பி விட்டார்கள். ஆனால் மூவரும் தற்போது தங்குவதற்கு வீடு இல்லாமல் நிர்க்கதியாக நிற்கிறார்கள்.

தற்காலிகமாக நண்பர் ஒருவரின் வீட்டில் தம்பதியர் தங்கியுள்ள நிலையில், அங்கும் சில காலம் மட்டுமே தங்கியிருக்க முடியும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் எங்களது குடும்பத்தினரும் மிகவும் ஏழ்மையானவர்கள் எனக் கூறியுள்ள தம்பதியர், கை குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் நிற்கிறோம் என வேதனையுடன் கூறியுள்ளார்கள். ஒரு பக்கம்  தங்கியிருந்த வீட்டை இழந்த நிலையில், மற்றொரு சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றம் போன்றவற்றால் என்ன செய்வது எனத் தெரியாமல் தம்பதியர் தவித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்