‘பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்’.. ‘டிசம்பர் முதல் அமல் என அம்ரீந்தர் சிங் அறிவிப்பு’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மாட் ஃபோன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மாட் ஃபோன் வழங்கும் திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வரும் டிசம்பரில் முதல்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பில் படிக்கும் ஸ்மார்ட் ஃபோன் இல்லாத மாணவிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PUNJAB, GOVERNMENT, SCHOOL, GIRL, STUDENTS, FREE, SMARTPHONE, AMARINDERSINGH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்