மனைவியுடன் தனி அறையில் இருக்க கைதிகளுக்கு அனுமதியா??.. முதல் முறையாக முயற்சி எடுக்கும் மாநிலம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் சிறையில் உள்ள கைதிகளுக்கு அம்மாநில அரசு அறிவித்துள்ள சலுகை தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது

Advertising
>
Advertising

பஞ்சாப் சிறையில் உள்ள கைதிகளுக்கான சலுகை தொடர்பாக பஞ்சாப் சிறைத் துறை ஒரு முடிவை எடுத்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகள், தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது என்றும், வரும் செவ்வாய்க்கிழமை (27.09.2022) முதல் இந்த சலுகை நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

நபா மாநகரில் அமைந்துள்ள கோயிந்த்வால் மத்திய சிறைச்சாலை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் சிறைச்சாலை ஆகிய இரு சிறைச் சாலைகளில் இது அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல இதற்காக கைதிகளுக்கு சில விதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.


அதன்படி, நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்றும் கொடூர குற்றங்களை புரிந்தவர்கள், ரவுடிகள், அபாயகரமான கைதிகள், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், சிறைகளில் நீண்ட காலமாக இருக்கும் நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, தேர்வாகும் கைதிகள், குளியலறையுடன் கூடிய தனி அறையில் தனது இணையருடன் 2 மணி நேரம் செலவிட அனுமதி வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இத்தகைய அனுமதி மூலம் கைதிகள் மத்தியில் நன்னடத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதே போல 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த சலுகை வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கும் நிலையில், அவர்களின் திருமண பந்தமும் வலுப்படும் என கூறப்பட்டுள்ளது. அப்படி ஜெயிலுக்கு வரும் மனைவி அல்லது கணவர், ஹெச்.ஐ. வி பாதிப்பு இல்லை, கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றுடன் வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்தியாவில் சிறை கைதிகளுக்கு இது போன்ற ஒரு சலுகையை வழங்கும் முதல் மாநிலம் பஞ்சாப் தான் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PUNJAB PRISON, INMATES, PARTNER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்