‘கொரோனா’ அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் ‘தப்பியோட்டம்?’... ‘அதிர்ச்சியடைந்த’ மருத்துவர்கள் ‘போலீசாரிடம்’ கோரிக்கை... ‘அச்சத்தை’ ஏற்படுத்தியுள்ள சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாபில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் இருந்து சீனா வழியாக பஞ்சாப் வந்த 38 வயது நபர் ஒருவர் ஃபரித்காட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்துகொண்டுள்ளார். அப்போது கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகக் கூறி அவர் கோபிந்த் சிங் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார். தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் ஓடியதால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்து அவரைப் பிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவருடைய ரத்த மாதிரி புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

POLICE, CORONAVIRUS, PUNJAB, PATIENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்