ரொம்ப Rare-ஆன கருப்பு குதிரை.. 23 லட்சம் கொடுத்து ஆசையுடன் வாங்கிய நபருக்கு காத்திருந்த ஷாக்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் மாநிலத்தில் அரியவகை கருப்பு நிற குதிரை என ஒருவரை ஏமாற்றி 23 லட்ச ரூபாய் சுருட்டிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

கருப்பு நிற குதிரை

பொதுவாக குதிரைகளை வளர்ப்பதை சிலர் தங்களது கௌரவத்தின் அடையாளமாகவும் பண்பாட்டு நீட்சியாகவும் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக கருப்பு நிற குதிரைகள் மிகவும் அரிது என்பதால் அவற்றை வாங்க குதிரை பிரியர்கள் இடையே எப்போதும் கடும் போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருக்கும் கருப்பு நிற குதிரையின் மீது அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. அதைத்தான் அதே பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று பயன்படுத்தி அவரை ஏமாற்றி உள்ளது.

23 லட்சம்

பஞ்சாப் மாநிலத்தின் சங்கிருர் மாவட்டத்தின் சுனம்சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜதிந்தர் பால் சிங், லக்பிந்தர் சிங் மற்றும் லாச்ரா கான் என்ற கொகா கான் ஆகிய நபர்களிடம் தன்னுடைய குதிரை ஆசையை கூறியுள்ளார். இதற்கு அந்த மூவர் கொண்ட கும்பல் தங்களிடம் அரியவகை கருப்பு நிற குதிரை இருப்பதாகவும் அதன் விலை 23 லட்ச ரூபாய் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆர்வமடைந்த ரமேஷ் குமார் முதலில் 7.6 லட்ச ரூபாயை பணமாக அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு 2 காசோலைகள் மூலமாக மீதி பணத்தை கும்பலிடம் கொடுத்த பிறகு குதிரையை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியிருக்கிறார்.

சாயம்

தன்னுடைய நீண்ட கால ஆசையான கருப்பு நிற குதிரையை வாங்க வேண்டும் என்பது நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்த ரமேஷ் குமார் ஆசையுடன் குதிரையை குளிப்பாட்ட அழைத்துச் சென்றுள்ளார். தண்ணீரை குதிரையின் மீது பீய்ச்சி அடிக்க குதிரை நிறம் மாறத் துவங்கி இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் சிவப்பு (செவலை) நிறத்தில் குதிரை காட்சி அளிக்கவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார் ரமேஷ்.

செவலை நிறை குதிரையின் மீது கருப்பு வர்ணம் பூசி அரியவகை குதிரை என ரமேஷ் குமாரை ஏமாற்றிய மூவர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

 

HORSE, BLACKHORSE, PUNJAB, பஞ்சாப், கருப்புகுதிரை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்