'50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் ரெடி'... 'அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்'... அதிரடியாக அறிவித்த அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இதனால் பெற்றோர்கள் மத்தியில் குழந்தைகளின் கல்வி குறித்து கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தசூழ்நிலையில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்று கொடுக்க பல மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவ- மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலாது. இதை கருத்தில் கொண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போகன்கள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளன. கொரோனா காலத்தில் மாணவிகள் ஆன்-லைன் மூலம் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50,000 smartphones ready for distribution, Chief Minister @capt_amarinder Singh tells @IYCPunjab during VC. Says they’ll be given to girl students of govt schools of class XI & XII to facilitate online learning on priority during #COVID19 crisis. pic.twitter.com/wSeKbtnNv7
— CMO Punjab (@CMOPb) July 28, 2020
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இப்போ தானே 'அவ்ளோ' பேர தூக்குனீங்க?... மீண்டும் நூற்றுக்கணக்கானவர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் நிறுவனம்... ஊழியர்கள் அதிர்ச்சி!
- விருதுநகரில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!.. தூத்துக்குடியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. பதறவைக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- 'உங்களை வேலைய விட்டு தூக்கியாச்சு'... 'மெயில் வரும்'... 'காய்கறி விற்ற ஐடி என்ஜினீயர்'... எதிர்பாராமல் வந்த சர்ப்ரைஸ்!
- இந்தியாவில் கொரோனா தடுப்பூசி சோதனை 'இறுதிக்கட்டத்தை' எட்டியது!.. 'ஆனா அது இந்தியர்களுக்கு வேணும்னா'... வெளியான 'பரபரப்பு' தகவல்!
- நடிகர்கள் விமல், ’பரோட்டா’ சூரி மீது ’போலீசார்’ வழக்கு பதிவு - என்ன நடந்தது?
- ஜாம்பவானுக்கே இந்த நிலையா?... 21,000 ஆயிரம் ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்?... கதறும் ஊழியர்கள்!
- 'பள்ளிகள் திறப்பது எப்போது?'... 'அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை'... 'வெளியாகும் முக்கிய முடிவுகள்'?... எதிர்பார்ப்பில் பெற்றோர்!
- 'ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் தமிழகம்'... 'எடுக்கப்படப்போகும் முக்கிய முடிவுகள்'... மருத்துவ நிபுணர் குழுவுடன் 30ம் தேதி முதல்வர் ஆலோசனை!
- 'இப்போதைக்கு மேட்ச் நடக்குமான்னு தெரியல'... 'எனக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கு'... கிரிக்கெட் வீரர் எடுத்த முடிவு!