‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த’... ‘அடுத்தடுத்து ஊரடங்கை தானாகவே’... ‘நீட்டிக்கும் மாநிலங்கள்’... 'மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்த அரசு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசா மாநிலத்தை தொடர்ந்து பஞ்சாபிலும் ஊரடங்கு மே மாதம் 1- ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற மே 1-ஆம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிஸாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மே 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் பலியாகினர். அதேசமயம் கொரோனா பாதிப்பில் இருந்து 4 பேர் குணமடைந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்