'பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு குளறுபடிக்கு நாங்கள் காரணமே இல்லை'- பஞ்சாப் முதல்வர் விளக்கம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

"பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் போது ஏற்பட்ட குளறுபடிகளுக்கு நாங்கள் காரணம் இல்லை" என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி சென்று இருந்தார். பிரதமர் மோடியின் பாதையில் திடீரென மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரது கான்வாய் சுமார் 20 நிமிடங்களுக்கு மேம்பாலத்திலேயே சிக்கிக் கொண்டது.

பிரதமர் மோடி பஞ்சாப்பில் ஃபெரோஸ்பூர் என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாக இருந்தது. அந்த ஊருக்குச் செல்லும் வழியில் திடீரென மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் பிரதமர் மோடி தனது கான்வாயில் மேம்பாலத்திலேயே சுமார் 20 நிமிடங்களுக்கு சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

பாதுகாப்பு சரியானதாக இல்லை என பிரதமர் மோடியின் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. பஞ்சாப் அரசு இந்த ஏற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது. 

விவசாயிகள் சாலை மறியல் செய்ததால் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு  பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரிகளிடம், “பத்திண்டா விமான நிலையத்திற்கு நான் உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி" எனக் கூறியது பதற்றத்தை அதிகரித்தது.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "பிரதமரின் வருகைக்காக மாநில அரசின் சார்பில் பல ஏற்பாடுகள், பாதுகாப்பு பலப்படுத்துதல் என அனைத்தும் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் ஹெலிகாப்டர் பயணம் சாலை வழிப் பயணமாக மாறிவிட்டது. இதுதொடர்பான தகவல் தொடர்பை அவர்கள் சரியாகச் செய்யவில்லை. எங்கள் மீது குறை சொல்வது நியாயமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

NARENDRAMODI, மோடி, பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர், PM MODI, PUNJAB CM, PM MODI SECURITY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்