"40 வருஷமா Waiting".. கைவிடாத முதியவருக்கு 88 வயதில் அடித்த அதிர்ஷ்டம்.. ஒரே இரவில் கோடீஸ்வரர்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு நபரது வாழ்க்கையில் எந்த சமயத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரிவிக்க முடியாது. வாழ்க்கையில் கஷ்டங்கள் நிறைந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்கள் எதிர்பாராத சமயத்தில் ஒரு சம்பவம் நடந்து மொத்த வாழ்க்கையையும் அப்படியே புரட்டிப் போடும்.

Advertising
>
Advertising

Also Read |கோவில் திருவிழாவில் திடீரென கிரேன் விபத்து.. தமிழ்நாட்டையே கலங்க வைத்த சோகம்..

அந்த வகையில் ஒரு அதிர்ஷ்டம் தான் முதியவர் ஒருவருக்கு நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் தேராபாசி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மஹந்த் துவாரகா தாஸ். 88 வயதாகும் இவர், கடந்த 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்ததாக தெரிகிறது.

இவருக்கு இரண்டு மகன்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இத்தனை ஆண்டுகளாக தனக்கு கிடைக்கும் சிறு சிறு வேலைகளையும் மஹந்த் துவாரகா செய்து வந்ததாக தெரிகிறது.

அதிலும் லாட்டரி பிரியரான மஹந்த், கடந்த 40 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி தான் சமீபத்தில் சங்கராந்தி லாட்டரி டிக்கெட்டையும் அவர் வாங்கி உள்ளார். இந்த லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியான நிலையில் சுமார் 5 கோடி ரூபாய் லாட்டரி பரிசை மஹந்த் வென்றுள்ளார்.

88 வயதான மஹந்த் துவாரகா தாஸ், 5 கோடி ரூபாய் பரிசை பெற்றுள்ள நிலையில் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைத்து போய் உள்ளனர். மேலும் தனது பேரன் மூலம் இந்த லாட்டரி டிக்கெட்டை மஹந்த் வாங்கிக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து தனக்கு பரிசாக கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை இரு மகன்களுக்கும் பிரித்துக் கொடுக்க உள்ளதாகவும் மஹந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக நிச்சயம் லாட்டரியில் பணம் வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் லாட்டரி வாங்கி வந்த நபருக்கு 88 ஆவது வயதில் 5 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | 24 வருஷம் ஒரே தட்டில் உண்ட தாய்.. அவரது மறைவுக்கு பின் மகனுக்கு தெரிய வந்த மனம் நொறுங்க வைக்கும் காரணம்!!

PUNJAB, OLD MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்