VIDEO: 'செல்போன ஆட்டைய போட்டுட்டு...' 'எஸ்கேப் ஆக ட்ரை பண்றாங்க...' 'ஆனா வண்டி நகரலயே...' 'விடாம சண்டை செய்த சிங்கப் பெண்...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுமி சாலையில்  செல்லும் போது தனது போனை பிடுங்க முயன்றவர்களுடன் சண்டையிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஞ்சாப் மாநிலம் ஜலந்தர்-கபுர்தலா சாலைக்கு அருகிலுள்ள தீன் தயால் உபாத்யா நகரின் சாலையில் குசும்குமாரி 15 வயது சிறுமி, கையில் மொபைலுடன் தன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இரு நபர்கள் சிறுமியின் கையில் இருந்த மொபைல் போனை பிடித்து இழுத்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட சிறுமி உடனடியாக பைக்கில் பின்பக்கம் உட்கார்ந்திருந்த நபரை பிடித்து இழுத்துள்ளார்.

பிடிபட்ட கொள்ளையன் கூர்மையான ஆயுதத்தால் தாக்க முயன்றும் சிறுமி விடாபிடியாக இருந்துள்ளார். அதன்பின் அப்பகுதிமக்கள் ஓடி வந்து பிடிபட்ட கொள்ளையனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும் அருகிலிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து கூறிய ஃபதேபுரி மொஹல்லாவில் வசிக்கும் குசும்குமாரி (15) என்னும் சிறுமி, 'நான் வீட்டிற்கு செல்லும் போது பைக்கில் வந்த இருவர் எனது மொபைல் போனை பறிக்க முயன்றனர்.

அப்போது பின்னாடி இருந்தவரின் டி-ஷர்ட்டைப் பிடித்து இழுத்தேன். பின்னர் அவர் என்னைத் தாக்கி என் மணிக்கட்டை ஒரு டேட்டரால் தாக்கினார். ஆனால் நான் தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்தேன், பின்னர் அவரை அவரது பைக்கிலிருந்து இழுத்துச் சாலையில் போட்டேன். அதன் பின்னரே அப்பகுதி மக்கள் வந்து எனக்கு உதவினர்.' எனக்கூறியுள்ளார்.

தற்போது காயமடைந்த 15 வயது சிறுமி ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

மேலும் பிடிபட்ட கொள்ளையன் பஸ்தி டேனிஷ்மண்டாவின் பேகம்புராவில் வசிக்கும் அவினாஷ் குமார் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது ஐபிசியின் 389 பி மற்றும் 307 (கொலை முயற்சி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்