'உன் புருஷன தோள்ல தூக்கிட்டு...' 'தெருத்தெருவா சுத்தி வரணும்...' 'வினோத தண்டனை கொடுத்த கணவன் குடும்பம்...' ஏன் தெரியுமா...? வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியபிரதேச மாநிலத்தில் கணவனை விட்டு பிரிந்த பெண்ணிற்கு தண்டனையாக, கணவரை தோளில் தூக்கி கிராமத்தை சுற்றி வருமாறு தண்டனை அளித்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டம் கல்யாணபுராவுத்தை சேர்ந்த 21 வயது பழங்குடி பெண் 10 நாட்களுக்கு முன் தன் மாமியார் வீட்டில் இருந்து தீடீரென காணாமல் போயுள்ளார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் அப்பெண்ணுக்கு அவரது கணவருக்கும் சரியான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது.

மருமகள் காணாமவில்லை என்றதும் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் அந்தப் பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் ஓடி விட்டதாக சந்தேகித்து தனது மனைவியை காணவில்லை என கல்யாணபுரா காவல்நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பெண் வீட்டாரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஒரு வழியாக தங்களது பெண்ணை கண்டுபிடித்து மருமகன் கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் இதை கேள்விப்பட்ட மருமகன் வீட்டார் கிராமத்தின் எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்து கணவனை விட்டு ஓடிய அப்பெண்ணிற்கு அனைவரும் இணைந்து தண்டனை அளித்துள்ளனர்.

21 வயதுடைய அந்த பெண் தன் கணவரை தோள் மீது சுமந்து கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் சுற்றி வரவேண்டும் என்பதே அந்த தண்டனை. அப்பெண்ணும் தன் கணவனை தோளில் தூக்கி தெருக்களில் வலம் வரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி கண்டனங்களை எழுப்பியுள்ளது.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பெண்ணிற்கு தண்டனை வழங்கிய அவரது கணவர் மற்றும் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்