"வீட்ட 'க்ளீன்' பண்றப்போ... இப்டியா 'careless'அ இருக்குறது??..." குப்பையில் விழுந்த தங்க 'நகை'... அடுத்தடுத்து நடந்த 'ட்விஸ்ட்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனேவின் பிம்பிள் சவுதாகர் (Pimple-Saudagar) என்னும் பகுதியை சேர்ந்தவர் ரேகா செலுக்கர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் தனது வீட்டினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் தனது வீட்டில் இருந்த தேவையில்லாத பொருட்கள் அனைத்தையும் அவர் நீக்கி அவற்றினை சில பைகளில் அடைத்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். இந்நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு தான் அந்த குப்பையில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்ததை அறிந்து ரேகா அதிர்ச்சியடைந்தார்.
பல நாட்கள் சேமித்த பணத்தின் மூலம் வாங்கிய நகைகளை மீட்டெடுக்க வேண்டி உடனடியாக நடவடிக்கைகளை ரேகா மேற்கொண்டார். இது தொடர்பாக, அப்பகுதியில் பணிபுரிவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள குப்பை தொட்டிகளில் தேடிய நிலையில் அங்கிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது ரேகாவின் குடும்பத்தினருக்கு தெரிந்தது.
தொடர்ந்து அங்கு சென்று குப்பைகளில் தேடிய நிலையில், அதில் அவர்களின் பை இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 40 நிமிடங்களுக்கு பின்னர், ரேகாவின் நகைகள் திரும்பக் கிடைத்த நிலையில், இன்னும் சற்று தாமதமாகி இருந்தால் அவையனைத்தும் பெரிய குப்பை கிடங்கு பகுதியில் கொட்டப்பட்டு அந்த குவியலில் தேடுவதே கடினமாக இருந்திருக்கும் என சிலர் தெரிவித்துள்ளனர்.
நகைகள் திரும்பக் கிடைத்ததால் ரேகா மற்றும் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். முதலில் கை விட்டு போன விலை மதிப்புள்ள பொருள் ஒன்று, அற்புதம் நிகழ்ந்தது போல மீண்டும் உரியவர்கள் கைக்கே வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பட்டாசு வெடிக்காதீங்க ப்ளீஸ்...' fans-க்கு இன்ஸ்டாகிராமில் விராட் கோலி வேண்டுகோள்...!
- "இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்!".. தீபாவளிக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய முதல்வர் பழனிசாமி!.. வியப்பூட்டும் தகவல்!
- ‘தீபாவளி தினத்தில்’... ‘வீடு முன் திரண்ட ரசிகர்கள்’... ‘தனக்கே உரிய பாணியில்'... 'நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து’... ‘உற்சாகம் ஆன ரசிகர்கள்’...!!!
- 'ஹேப்பி தீபாவளி 2020!'.. பேஸ்புக்கின் ‘விர்ச்சுவல் தீபாவாளி கொண்டாட்டம்!’.. அசரவைக்கும் புதிய அம்சங்கள்!
- சூப்பருங்கண்ணா..! காதுக்கு தகவல் வந்த அடுத்த நிமிடமே நேரில் சென்று உதவிய விஜய் ரசிகர்கள்.. குவியும் பாராட்டு..!
- ‘தீபாவளிக்கு சொந்த ஊர் பயணம்’... ‘சென்னையில் இருந்து மட்டும் இவ்வளவு பேரா???’... வெளியான தகவல்..!!!
- 'அடுத்தடுத்து தடை விதிக்கும் மாநிலங்கள்'... 'தீபாவளிக்கு கண்டிப்பாக இதப் பண்ணக் கூடாது'... 'கடும் எச்சரிக்கை விடுக்கும் மாநில அரசுகள்'!
- ‘தீபாவளி வேற வருது’...!!! ‘கொரோனா 2-வது அலை உருவாகாமல் இருக்க’...!! மக்கள் இதப் பண்ணனும்’...!!!
- 'தீபாவளி பண்டிகைக்கு'... 'சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போறீங்களா???'... ‘சிறப்புப் பேருந்துகள் எப்போது, எங்கிருந்து செல்லும் தெரியுமா??... வெளியான அறிவிப்பு...!!!
- இந்த தீபாவளிக்கு ‘பட்டாசு’ வெடிக்கக் கூடாது.. ‘அதிரடி’ அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்..!