"அது வெறும் ஸ்பா இல்ல.. உள்ளே வேற என்னமோ நடக்குது".. போலீசுக்கு கிடைச்ச ரகசிய தகவல்.. கஸ்டமர் போல போன போலீஸ் அதிகாரி.. வெளிவந்த பகீர் உண்மை.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கிவந்த ஸ்பாவில் காவல்துறையினர் நடத்திய பரிசோதனையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | ஜாலி ரெய்டுக்கு போய்.. 160 அடி உயரத்துல சிக்கிய பயணிகள்.. என்ன நடக்குதுன்னு தெரியாம முழிச்சப்போ ஊழியர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!

ஸ்பா

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் சலுன்கே விஹார் பகுதியில் இயங்கிவரும் ஸ்பா-வில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அந்த ஸ்பா-வை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சமூக பாதுகாப்பு அமைப்பு அந்த ஸ்பா-வில் பாலியல் குற்றம் நடைபெறுவதாக அளித்த தகவலை விசாரிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து க்ரைம் பிராஞ்ச் துறையின் மூத்த காவல் ஆய்வாளர் ராஜேஷ் புரானிக் சம்பந்தப்பட்ட ஸ்பா-வுக்கு வாடிக்கையாளர் போல சென்றிருக்கிறார். அப்போது அவர் அங்கிருந்த அறைகளை நோட்டம் விட்டிருக்கிறார். அங்கு பாலியல் குற்றம் நடைபெறுவதை அறிந்த ராஜேஷ், உடனடியாக சக காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய சிக்னல் கொடுத்துள்ளார். அந்த கட்டிடத்துக்கு அருகே பதுங்கியிருந்த காவல்துறையினர் அந்த ஸ்பா-வுக்குள் நுழைந்தனர்.

கைது

இதனை தொடர்ந்து ஸ்பாவை நடத்திய மேலாளர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி மண்டல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமித் ஹோகண்டே ஆகிய இருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு இருந்த 4 பெண்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்கள் சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீப காலத்தில் இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அதன் காரணமாகவே இப்படியான ரகசிய பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசிய அதிகாரிகள்," குறிப்பாக, சொகுசு விடுதிகள், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களில் இது போன்ற குற்றச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 593 பெண்களை மீட்டுள்ளோம். இதில் 244 பெண்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்" என்றனர்.

புனேவில் ஸ்பா-வில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருப்பது அம்மாநிலம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | "ஸ்கூல் லீவு விட்டாச்சுன்னு.. இதையெல்லாம் பண்ண கூடாது.. அன்புடன் உங்களது கலெக்டர்".. குழந்தைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி எழுதிய பாச கடிதம்.. வைரல் பதிவு..!

POLICE, PUNE POLICE RAID, ARREST, RESCUED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்