பேத்தி'ய Welcome பண்ண பிரம்மாண்ட பிளான் போட்ட தாத்தா.. "அந்த ஏரியாவே ஒரு நிமிஷம் வாயை பொளந்துட்டாங்க.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதிதாக பிறந்த பேத்திக்கு வேண்டி, தாத்தா ஒருவர் செய்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ‘அதே கிரவுண்ட்’.. மறக்க முடியாத சம்பவம்.. மறைந்த ஷேன் வார்னேவுக்காக RR அணி எடுத்துள்ள சிறப்பான முன்னெடுப்பு..!

புனேவை அடுத்த பலேவாடி என்னும் பகுதியை சேர்ந்தவர் அஜித் பாண்டுரங் பல்வாட்கர். விவசாயியான இவரது மனைவியின் பெயர் சங்கீதா.

இந்த தம்பதியருக்கு கிருஷ்ணா என்ற மகனும் உள்ளார். இவருக்கு அக்ஷதா என்ற பெண்ணுடன் திருமணமாகி,  கிரியான்ஷ் என்ற மகனும் உள்ளார்.

தாத்தாவின் அமோக வரவேற்பு

இந்நிலையில், அக்ஷதா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் சமீபத்தில் பிறந்துள்ளது. பேத்தி பிறந்ததால் அதிக உற்சாகத்தில் இருந்த அஜித் பாண்டுரங், மருமகள் மற்றும் பேத்தியை வித்தியாசமாக தனது வீட்டிற்கு வரவேற்க முடிவு செய்துள்ளார்.

மருமகளுக்கு இன்ப அதிர்ச்சி

தாய் வழி தாத்தா மற்றும் பாட்டி வீட்டில் இருந்து குழந்தையையும், தாய் அக்ஷதாவையும் அழைத்து வரும் நேரம் வந்துள்ளது. இதற்கு வேண்டி, ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்த அஜித் பாண்டுரங், அதில் மருமகள் மற்றும் பேத்தியை அழைத்து வந்து, மருமகள் உள்ளிட்ட அனைவருக்கு இன்ப அதிர்ச்சியுடன் கூடிய அமோக வரவேற்பை கொடுத்துள்ளார்.

வைரலாகும் புகைப்படங்கள்

இது பற்றி பேசிய அஜித் பாண்டுரங், குடும்பத்தின் புதிய உறுப்பினரான தனது பேத்திக்கு பெரிய வரவேற்பு ஒன்றை அளிக்க விரும்பி, ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்ததாக தெரிவித்துள்ளார். அஜித் பாண்டுரங் தனது குடும்பத்தினருடன் பேத்தியை வரவேற்கும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கடந்த ஜனவரி மாதத்திலும், புனே பகுதியை சேர்ந்த ஒருவர், புதிதாக பிறந்த தன்னுடைய மகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டி, ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்து அழைத்து வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

PUNE, HELICOPTER, NEW BORN BABY, GRAND DAUGHTER, புனே, தாத்தா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்