மற்றொரு ‘புல்வாமா’ தாக்குதலா?.. காருக்குள் 20 கிலோ வெடிப்பொருள்.. ‘தப்பி ஓடிய டிரைவர்’.. உச்சக்கட்ட பரபரப்பில் காஷ்மீர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புல்வாமாவில் 20 கிலோ வெடிபொருள்களுடன் கார் ஒன்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து தெரிவித்த போலீஸ் அதிகாரி விஜய்குமார், ‘உளவுத்துறை கொடுத்த தகவலை அடுத்த கடந்த 2 நாட்களாக ராணுவம், துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையின் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை வாகன சோதனையின் போது கார் ஒன்று நிற்காமல் சென்றதைப் பார்த்த பாதுகாப்பு படையினர், காரை விரட்டி சென்று துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் காரில் இருந்த டிரைவர் தப்பிவிட்டார்.

பின்னர் காரை சோதனை செய்ததில் 20 கிலோ அளவிலான வெடிபொருட்கள் (IED) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வெடிபொருள் பத்திரமாக அழிக்கப்பட்டது. இந்த அளவிலான வெடிபொருள் ஒரு பெரிய தாக்குதலை ஏற்படுத்தக்கூடியது' என அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு மாதங்களில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அதிகரித்துள்ளன. இந்த காலகட்டத்தில் 30 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இதேபோல புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்த நிலையில் மீண்டும் புல்வாமாவில் மர்மநபரின் காரில் 20 கிலோ வெடிபொருள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்