'சல்லடை போட்டு தேடியாச்சு...' 'வீட்டுக்குள்ள எதுவுமே சிக்கல...' அப்போ தோட்டத்துல...? - தோண்டத்தோண்ட வந்துக்கிட்டே இருக்கு...!
முகப்பு > செய்திகள் > இந்தியா44 வயதான ஆறுமுகம் என்பவர் புதுச்சேரி அருகே கிராமப்பகுதியான ஆண்டியார்ப்பாளையத்தில் தையல் தொழில் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் கள்ள சாராயம் விற்கும் விபரீத தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
ஆறுமுகம் செய்து வந்த கள்ளச் சாராய விற்பனை, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், மேற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீஸார் மதகடிப்பட்டில் உள்ள ஆறுமுகத்தின் மாமனார் பழனி என்பவர் வீட்டில் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் வீட்டிற்குள் ஏதும் சிக்கவில்லை. ஆனால் பழனியின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த குழியிலும் சொகுசு கார் ஒன்றிலும் எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
அதோடு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 119 கேன்களில் இருந்த 4,165 லிட்டர் எரி சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மாமனார் பழனியை மாட்டிவிட்டு, டெய்லர் ஆறுமுகம் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயம், கார், பைக் ஆகியவற்றை போலீஸார் கலால் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என் தங்கமே...! 'உன்ன பார்த்து எம்புட்டு நாளாச்சு...' - ஆனந்தக்கண்ணீரோடு பாசப்போராட்டம் நடத்திய மதுப்பிரியர்...!
- 'மச்சி இங்க கடை எல்லாம் மூடிட்டாங்க டா'... 'கவலையை விடு'... 'நண்பனுக்காக மாஸ்டர் பிளான் போட்ட இளைஞர்கள்'... சல்லி சல்லியாக நொறுக்கிய போலீசார்!
- காரில் ஒட்டப்பட்டிருந்த 'ஸ்டிக்கரில்' இருந்த 'அந்த' வார்த்தை...! 'டவுட் ஆன போலீசார்...' 'பேக் சீட் அடியில பார்த்தப்போ...' - அதோடு மட்டுமல்லாமல் மேலும் ஒரு அதிர்ச்சி...!
- நீங்க 'அதுக்காக' தான் வெளிய வர்றீங்கன்னா... 'தயவுசெய்து இனிமேல் வராதீங்க...' 'அதுக்கு மாற்று ஏற்பாடு பண்ணியாச்சு...' - சட்டீஸ்கர் அரசின் 'அதிரடி' முடிவு...!
- ஒரு ரவுண்ட் அடிச்சு முடிக்குற வரைக்கும் எதையும் பார்க்கல...! 'அடுத்த ரவுண்டுல தான்...' 'அத' பார்த்த உடனேயே லைட்டா... - பதறிப்போன நபர்...!
- என்னங்க சொல்றீங்க...? 'ஆமா சார், எல்லாத்துக்கும் காரணம்...' 'ஸ்டேஷன்ல உள்ள எலிங்க தான்...' இப்படி கூடவா நடக்கும்...! - ஆடிப்போன உயர் அதிகாரி...!
- ‘வாட் வரி குறைப்பு’!.. புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை.. லிட்டருக்கு எத்தனை ரூபாய் குறையும்..?
- 'நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி'... 'புதுச்சேரியில் காங்கிரஸ்' அரசு கவிழ்ந்தது!
- VIDEO: ‘ராகுல் அண்ணா...!’.. உணர்ச்சிவசப்பட்ட மாணவி.. ‘அங்க பாருங்க, அழக்கூடாது’.. புதுச்சேரி கல்லூரியில் நடந்த ருசிகரம்..!
- #VIDEO: 'போலாம் ரைட்...' 'ஓ அப்போ என்ன பஸ்ல ஏத்த மாட்டிங்களா, இப்போ பாருங்க...' 'எக்ஸ்பிரஸ் பஸ்ல சாகசம்...' - வைரல் வீடியோ...!