'மதுபோதையில் புதுமாப்பிள்ளை செய்த கொடூரம்'... 'மர்மமான முறையில் இறந்துகிடந்த தாய்'... 'பின்னர் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரியில் புதுமாப்பிள்ளை ஒருவர் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பாகூரை சேர்ந்த ராணி என்பவர் கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்ற ராணி அங்கிருந்து தான் சம்பாதித்த பணத்தை மகன் அய்யனாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைவைத்து அவரும் புதிதாக வீடு கட்டி, தொழில் தொடங்கியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு புதுச்சேரி திரும்பிய ராணி தன்னிடம் இருந்த மீதிப் பணத்தை தனது மகளுக்கு கொடுக்க விரும்பியதாகவும், அதற்கு அய்யனார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அய்யனாரும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, புதிதாக கட்டிய வீட்டில் தாய், மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அய்யனாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், கடந்த 11ஆம் தேதி மதுபோதையில் இருந்த அய்யனாருக்கும், ராணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் ராணி இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராணியின் கழுத்து நெரிக்கப்பட்டதும், தலையில் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதைவைத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தியதில் மகன் அய்யனாரே ராணியை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரியவர, அய்யனாரை அவர்கள் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '7 வருஷமா லவ் பண்றோம் ஆனா அன்னிக்கு'... 'மருத்துவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்'... 'மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தால் உறைந்துநிற்கும் குடும்பம்!'...
- “பட்டு மெத்தை.. சுற்றியும் பிடித்தமான பொம்மைகள்.. நடுவில் கிடந்த 10 வயது சிறுவன்!”.. பெற்ற மகனை தாயே கொலை செய்த அவலம்!.. நொறுங்க வைக்கும் சம்பவம்!
- “கைலாசாவில் தங்கத்தில் கரன்சி!! 56 நாடுகளுடன் வர்த்தகம்!”.. நித்தியானந்தாவின் ‘அசரவைக்கும்’ அறிவிப்புகள்!
- 'ஐபோன், விமான பணிப்பெண் வேலை என'... 'ஆளுக்கேற்ப வலை விரித்து சென்னை இளைஞர் பார்த்த வேலை'... 'வெளியான திடுக்கிடும் தகவல்கள்!'...
- "நாலஞ்சு நாளா தேடி அலைஞ்சு... "கடைசியா இந்த கோலத்துல தான் எங்க தங்கத்த பாக்கணுமா??"... உடைந்து நொறுங்கிய 'குடும்பம்'... 'பகீர்' கிளப்பிய 'சம்பவம்'
- 'எதுவா இருந்தாலும் என் மச்சான் இருக்கானுங்க, அவங்க பாத்துப்பான்னு சொல்வானே'... கூடவே இருந்த நண்பர்கள் போட்ட கொடூர ஸ்கெட்ச்!
- 'மர்மமாக காணாமல் போன இளம் பெண்'... 'கிணற்றில் மிதந்த பார்சல்'... 'நாய் பண்ணைக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி'... அவிழாத மர்ம முடிச்சுகள்!
- 'நம்பி குழந்தையை அனுப்பிய தோழி'... 'கணவருடன் சேர்ந்துகொண்டு'... 'பெண் செய்த அதிரவைக்கும் காரியத்தால் பரபரப்பு!'...
- 'பணப் பிரச்சனை, பட வாய்ப்பில் சிக்கலா?'... '2-3 வருஷத்துல சம்பாதிச்சது மட்டும் இத்தனை கோடி!'... 'வெளியான முக்கிய தகவல்'...
- "கடைசியா ஒரு தடவ,,.. அவ முகத்த பாக்க முடியாம பண்ணிட்டீங்களே"... "இந்த நெலம யாருக்கும் வரக்கூடாதுங்க"... கதறி அழும் 'கணவர்'.. நடந்தது 'என்ன'??